தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

19 May 2026, 10:06 pm
பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு  குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

நாகர்கோவில்,மே 19- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மே 19 அன்று மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த குறித்த விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலை வர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, அலு வலர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினார்.

அவர் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கேரளா மாநி லத்தில் பெண் பாலின விகிதம் அதிகமாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்குழந்தைகள் பாலின விகிதம் 970 உள்ளது. பெண் சிசுக்கொலைகளை தடுத்தல் குறித்தும், பாலின விகிதம் உயர்த்துதல் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும்.

குழந்தைகளின் பாலினம் அறிந்து பெண் குழந்தைகள் சிசுக்கொலை செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து, கல்வி வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு தனி திட்டங்கள் ஒருநாட்டிற்கு மனித வளம் என்பது மிகவும் முக்கியமானது.

அதனால் தான் உலக நாடுகளான ஜப்பான், சீனா மற்றும் ஐரோ ப்பிய நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகித்ததை ஊக்கப்படுத்துவதோடு, பெண் குழந்தைகளுக்கு தனி பாதுகாப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, ஊக்கப் படுத்தி வருகின்றனர். \எனவே பெற்றோர்கள், கருவுற்றவுடன் பாலினத்தினை அறியும் நோக்கில் ஸ்கேன் பரிசோதனை மையங்க ளில் சென்று பரிசோதனை மேற்கொள்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். \ தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாது காப்பு நாளான பிப்ரவரி 24 அன்று பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்து வதற்காக சிறப்பாக செயலாற்றி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாம் இடம் பெற்று, முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பெருமை சேர்ந்தார். \இதற்கு காரணமாக இருந்த அனைத்து துறை அலுவலர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். \அதனைத்தொடர்ந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் காட்சித்தொடர்பியல் (Visual Communication) பயிலும் மாணவ மாணவி யர்கள் தயாரித்த குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வெளி யிட்டார்.\ இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் விஜயமீனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கிய பிரின்ஸ் ஜெபராஜ், துறை அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.