புதர்மண்டிக்கிடக்கும் குமரி மாவட்ட குளங்களில் நீரைச் சேமிக்க தூர்வாருக : விவசாயிகள் கோரிக்கை
19 May 2026, 10:12 pm

புதர்மண்டிக்கிடக்கும் குமரி மாவட்ட குளங்களில் நீரைச் சேமிக்க தூர்வாருக : விவசாயிகள் கோரிக்கை

நாகர்கோவில் ,மே 19- தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் உள்ள குமரி மாவட்ட குளங்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் அதிகப்படியாக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் வாழை,ரப்பர்,மா, பலா என விளை கின்றன.

நெல் விவசாயம் குமரி மாவட்டத்தில் இரு பருவங்களாக நடக்கிறது.

கன்னி பூ சாகுபடி, கும்பப்பூ சாகுபடி என இரண்டு வகையான சாகுபடிகள் நடக்கின்றன. இந்த விவசாயத்திற்கு பேச்சிப் பாறை, பெருஞ்சாணி ,மாம்பழத்துறை யாறு,சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் பல்வேறு குளங்களுக்கு சென்று, அங்கிருந்து வயல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் தற்போது விவ சாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.

இந்தக் குளங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி மணலால் நிறைந்து நிரம்பியுள்ளன.

சிறுமழை பெய்தால் கூட தண்ணீர் தேக்க முடியாத நிலையில் உள்ளது.

கனமழை பெய்தால் குளத்தில் இருந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.

மழைக் காலங்களில் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கும் தண்ணீர் புகுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம், பெரிய குளம் உள்ளிட்ட குளங்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் மண் குவியல்களால் நிறைந்து காணப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்க ளையும் தூர்வார வேண்டும். குமரி மாவட்டத்தின் விவசாயம் மற்றும் மக்களுக்கு உதவி செய்திட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.