முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டத்தில் 23 மனுக்கள் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்
21 Jul 2026, 9:31 pm
<p><strong>முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டத்தில் 23 மனுக்கள் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்</strong> </p><p>நாகர்கோவில், ஜூலை 21 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் களின் குறைகளை களைவதற்கு காலாண்டிற்கு ஒரு முறை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வரு கிறது. அதனடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில் கருணை அடிப்படை வேலை வாய்ப்பு, நிலப்பிரச்சனை, பட்டா கோருதல் உள்ளிட்டவை என மொத்தம் 23 மனுக்களை முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் வழங்கியுள்ளனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்கு டன் தீர்வு காண வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
