கன்னியாகுமரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதி தேர்தல்
19 Mar 2026, 3:18 pm
<p><strong>கன்னியாகுமரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதி தேர்தல்</strong></p>
<p>நாகர்கோவில் .மார்ச். 19- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக குறள் கூட்டரங்கில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, விள வங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஓம் பிரகாஷ் ராய், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபாஸ்ரீ நந்தா, குளச்சல் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ராம்டின்லியானி, கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி பொதுபார்வையா ளர் மனோஜ் குமார், கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர் .அழகுமீனா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின், உள்ளிட்டவர்கள் 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த அறி விப்பில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொ குதி, 233, விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23அன்று நடத்தப்பட உள்ளது. இதன்படி, கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,51,016 ஆண் வாக்காளர்களும், 7,59,390 பெண் வாக்காளர்களும், 144 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் என மொத்தம் 15,10,550 வாக்காளர்கள் இடம்பெற்றுள் ளார்கள். இதில் 11,871 மாற்றுத் திறன் வாக்காளர்களும், 18 வயதிற்கு மேற்பட்ட 32,949 வாக்காளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட 9725 வாக்காளர்கள் உள்ளார்கள். தமிழ்நாடு சட்டமன்ற பொ துத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கன்னியா குமரி சட்டமன்ற தொகுதியில் 363 வாக்குச்சாவடி மையங்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகு தியில் 322 வாக்குச்சாவடி மையங்க ளும், குளச்சல் சட்டமன்ற தொகுதி யில் 316 வாக்குச்சாவடி மையங்க ளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடி மையங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி யில் 301 வாக்குச்சாவடி மையங்க ளும் என மொத்தம் 1914 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ள னவா என ஆய்வு மேற்கொண்டு, உறுதிசெய்திட சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது, கன்னியா குமரி மாவட்டத்தின் வாக்குப் பதிவு 65 சதவீதமாக இருந்தது. நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்கினை 100 சதவீதம் பதிவு செய்திட உரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, வாக்குச்சத வீதத்தினை உயர்ந்திட தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலு வலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களும் தங்கள் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட அரசியல் கட்சி சுவர் விளம்ப ரங்கள், சுவரொட்டிகள், பாதகை கள் உள்ளிட்டவைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு, அகற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்திட அறிவுறுத்தப் பட்டது. நடைபெறவுள்ள பொ துத்தேர்தலை சுமூகமாகவும், மிக சிறப்பாகவும் நடத்திட அனைவ ரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளபட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Election Control Room) மற்றும் ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்பு மையம் , சி விஜில் உள்ளிட்ட மையங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கட்டு ப்பாட்டு அறை 24x7 அடிப்படை யில் செயல்பட்டு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள், cVIGIL செயலி புகார்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்கா ணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறி வுறுத்தபட்டது. மேலும் புகார் கண்காணிப்பு பிரிவில் உள்ள செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் உடனுக்குடன் சரி பார்க்கப்பட்டு, பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஊடகக் கண்காணிப்பு பிரிவில் நாளிதழ்கள் மற்றும் ஊட கங்களில் வரும் செய்திகள், கட்ட ணச் செய்திகள் மற்றும் அனுமதி யற்ற விளம்பரங்கள் கண்கா ணிக்கப்படுவதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது. கட்டுப்பாட்டு அறை செயல்பாடு களான தொலைபேசி மூலம் வரும் புகார்களை பதிவேடுகளில் உடனடியாக பதிவு செய்து, உரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோ தை, தேர்தல் விழிப்புணர்வு கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவ லர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மற்று அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
