மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: குமரியில் 459 மனுக்கள் குவிந்தன
2 Nov 2026, 10:32 pm
<p><strong>மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: குமரியில் 459 மனுக்கள் குவிந்தன</strong></p><p>நாகர்கோவில், நவ.2 -கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நவ. 2 திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டபல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 459 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடமிருந்து பெறப்பட்டஅனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக நடந்த மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்மாற்றுத்திறன் பயனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.</p>
