தவறாக பதிவேற்றம் செய்யும் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை நேரில் ஆய்வு செய்து ஆட்சியர் எச்சரிக்கை
10 Jul 2026, 9:02 pm
<p><strong>தவறாக பதிவேற்றம் செய்யும் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை நேரில் ஆய்வு செய்து ஆட்சியர் எச்சரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 10- தவறாக பதிவேற்றம் செய்யும் இ- சேவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதி களில் செயல்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பொது இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜூலை 10 வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அகஸ் தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங் கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பொது இ- சேவை மையங்கள் இயங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பொதுமக்களுக்குத் தேவையான அரசுச் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே, எளிய முறையில் வழங்குவ தற்காகத் ‘பொது இ-சேவை மையங்கள்’ மூலம் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலைவதைக் குறைத்து, இடைத்தரகர்கள் இல்லாத வெளிப்படையான சேவையை வழங்குவதே இம்மையங்களின் முதன்மை நோக்கமாகும். இவ்வாறு பொது இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் விண்ணப் பிக்கும் போது அவர்கள் தரும் ஆவணங்களை உரிய முறையில் சரிபார்த்து, அதில் கொடுக்கப் பட்டிருக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் ஆவ ணங்களில் உள்ள தகவல்கள் தவறாக பதி வேற்றப்பட்டு, அதனால் பொதுமக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டால் இ -சேவை மையங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இ-சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு அர சால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.60 மட்டுமே வசூ லிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவ ரங்கள் அனைத்து மையங்களின் தகவல் பலகையிலும் ஒட்டப்பட வேண்டும். அனைத்து இ -சேவை மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும். குறிப்பாக, சேவை மையத் திற்கு வரும் பொதுமக்கள் அனைவரிடமும் கனி வுடன் நடந்துகொள்ள வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அரசு இ- சேவை மையங்களை அணுகி, காலவிரயமும் பணவிரயமும் இன்றி அரசின் சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட வில்லுக் குறி சந்திப்பில் அமைந்துள்ள பொது இ சேவை மையம் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந் துள்ள பொது இ-சேவை மையம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p>
