தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

22 Sept 2026, 9:26 pm
விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

நாகர்கோவில், செப்.22-விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் என வேளாண் தொழில் நுட்ப கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை துவக்கிவைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வேளாண் தொழில் நுட்ப கருத்தரங்கு மற்றும் கண்காட்சி செப்டம்பர் 22 செவ்வாயன்று அகஸ்தீஸ்வரம் வட்டம் கன்னியாகுமரி செயின்ட் மேரிஸ் மேம்பாட்டு அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.

வேளாண் தொழில் நுட்பக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை உள்ளிட்ட வட்டாரங்களில் தான் விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் இரப்பர், வாழை உள்ளிட்டவைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு பக்கம் மலை, மறுபக்கம் கடல் என நிலப்பரப்பு வரம்பிற்குட்பட்டு உள்ளதால், நாம் நவீன தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி விவசாயத்தை பெருக்க வேண்டும். வான்மகள் திட்டத்தின் கீழ் பெண் விவசாயிகளுக்கு ட்ரோன் (Drone) இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கப்படும். மேலும் அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் சார்ந்த பல்வேறு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதன் வாயிலாக குமரி மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற அருகாமை மாவட்டங்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் மற்றும் களைக்கொல்லி தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளும் எவ்வித தயக்கமும் இன்றி இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறும்போது தான் புதிய இளைஞர்களும், பெண்களும் இத்துறைக்கு அதிகளவில் முன்வருவார்கள். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் இணை இயக்குநர் வேளாண்மை.வாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, துணை இயக்குநர்கள், துறை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.