மகளிர் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர அரசு - மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக
20 Aug 2026, 10:15 pm

மகளிர் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர அரசு - மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் குமரி ஆட்சியர் கலந்துரையாடல்

நாகர்கோவில், ஆக. 20-கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டத்தின் வாயிலாக கடனுதவிகள் பெற்று, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி, வைத்தியநாதபுரம், மேல ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுயத்தொழில் செய்துவரும் மகளிர் சுயஉதவிக்குழுவினரை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்நேரில் சந்தித்து, கலந்துரையாடினார்.

அப்போது ஆட்சியர் தெரிவிக்கையில்,தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கி வருகிறது.அதன்வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட மகளிர்பல்வேறு சுயத்தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பகுதியில் உதயம் மகளிர் சுயஉதவிக் குழுவில் 20 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 5 உறுப்பினர்கள் புவிசார் குறியீடு பெற்ற கோவில் நகைகள் பயிற்சி பெற்று தொழில்செய்கின்றனர். குழுவிற்கு வங்கி கடனாக ரூ.4 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக ரூ.2,00,000முதல் ரூ.2,50,000 வரை விற்பனை செய்வதில் மாதந்தோறும் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இலாபம் ஈட்டி சிறந்தமுறையில் செய்து வருகின்றோம்.அதனைத்தொடர்ந்து வைத்தியநாதபுரம் பகுதியில் 19 உறுப்பினர்கள் கொண்ட இசை மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரூ.1.80இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. அதில் அவர்கள் ஆப்பம் தொழில் செய்கின்றனர். அவர்கள் நாளொன்றுக்கு ரூ.3,500 முதல்ரூ.4,000 வரை இலாபம்ஈட்டி வருகிறார்கள். அவர்கள் தயார் செய்யும் மற்ற உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோஜா மலர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இவர்கள்ரூ.2 இலட்சம் கடனுதவி பெற்று கலர் மீன் பண்ணை தொழில் செய்கின்றனர். விற்பனை செய்வதில் மாதந்தோறும் ரூ,55,000 முதல் ரூ.65,000 வரை இலாபம் பெற்று வருகிறார்கள். அவர்களின் கலர் மீன்பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மகளிர் மேற்கொண்டு வரும் தொழில் நடவடிக்கைகள், தொழில் விரிவாக்கத் திட்டங்கள்மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள வாய்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மகளிர் சுயஉதவிக்குழுவின் பொருளாதார வளர்ச்சியே ஒரு மாவட்டத்தின் உண்மையான வளர்ச்சியாகும். அரசு வழங்கும் கடனுதவிகள் மற்றும் வாழ்வாதார திட்டங்களை பெண்கள்முழுமையாகப் பயன்படுத்தி, தங்களின் சுயதொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மகளிர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவும், கூடுதல் கடன் வசதிகள் மற்றும்தொழிற்பயிற்சிகளைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசுமற்றும் மாவட்ட நிர்வாகம்

எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில் உதவி திட்ட அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர், சமுதாயஅமைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.