ஆறுகாணியை சுற்றியுள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் நில அளவைப் பணிகுமரி ஆட்சியர் துவக்கி வைத்தார்
3 Nov 2026, 10:14 pm

ஆறுகாணியை சுற்றியுள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் நில அளவைப் பணிகுமரி ஆட்சியர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில்,நவ.3-கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், களியல் வருவாய் கிராமத்திற்குட்பட்ட ஆறுகாணியை சுற்றியுள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் நில அளவை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ,மாவட்ட வனஅலுவலர் முனைவர் அன்பு, முன்னிலையில் நவம்பர் 3 அன்று துவக்கி வைத்தார்.பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அவர்கள் கேட்கும் முன்பே முன்னின்று மாவட்ட நிர்வாகம்நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2006-ஆம் ஆண்டைய வன உரிமைச் சட்டத்தின் கீழ், 16 வன குடியிருப்புகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தனி நபர் நில உரிமைப் பட்டா வழங்கும் பொருட்டு,கிராம சபாக்கள் மூலம் பெறப்பட்ட மனுக்

கள் மீது நில அளவை பணி மேற்கொள்ள கியோகாப் சர்வேயிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் சென்னை (‘GYOKAP Surveying Training Institute Chennai’) நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் விளவங்கோடு வட்டம், களியல் வருவாய் கிராமத்திற்குட்பட்ட ஆறுகாணி குடியிருப்பில் மொத்தம் 716.79 ஏக்கர் நிலப்பரப்பை அளவீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆறுகாணி மேலேமண்ணடி பகுதியில் 113.31 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மட்டுமே நில அளவை பணிகள் நிறைவடைந்திருந்தன. மீதமுள்ள ஆறுகாணி ஒருநூறாம்வயல் மற்றும் பத்துகாணி, கற்றுவா, கல்லறவயல் ஆகிய பகுதிகளில் நில அளவைபணிகள் மேற்கொள்ளப்படாமல் நிலுவையில் இருந்து வந்தன.கடந்த 19.09.2026 அன்று நான் ஆறுகாணி, ஒருநூறாம்வயல் பழங்குடியினர் குடியிருப்பிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, நிலுவையில் உள்ள பகுதிகளிலும் உடனடியாக நில அளவை பணிகளை மேற்கொள்ள அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநரால் கியோகாப் நிறுவனத்திற்கு நில அளவை பணிகளைத் தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்று ஆறுகாணி, ஒருநூறாம்வயல் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனி நபர் நில உரிமை வழங்கும் பொருட்டிலான நில அளவைப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்

கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல அலுவலர் கலைமதி, உதவி வன பாதுகாவலர் பிரதாப், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர்) திருவாலி, வனச்சரகர் மகேஷ்வரன், வனத்துறையினர், பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.