தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருக! ஆய்வுக்கூட்டத்தில் குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்

5 Jun 2026, 11:02 pm
ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து  பயன்பாட்டிற்கு கொண்டு வருக! ஆய்வுக்கூட்டத்தில் குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருக! ஆய்வுக்கூட்டத்தில் குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில், ஜூன் 5- கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட இரயில்வே பகுதிகளை அகலப்படுத்து வதற்காக கையகப்படுத்தப் பட்டுள்ள நிலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்து வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி. விஜய் வசந்த் முன்னி லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்ட ரங்கில் ஜூன் 5 வெள்ளியன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், இரயில்வே துறை முதன்மை பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்ததாவது: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்குட் பட்ட நுள்ளிவிளை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலப் பணி களை விரைந்து முடிப்ப தோடு, சேதமடைந்துள்ள தற்காலிக சாலைகளை சீரமைத்து, வாகனங்கள் செல்வதற்கும் பொது மக்கள் சிரமமின்றி செல்வ தற்கும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நீண்ட நாட்களாக முடிக்கப்படாத ஒழுகின சேரி இரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக முடித்து, வாகனங்கள் எளிதாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறி வுறுத்தப்பட்டது.

நாகர்கோவில் டவுன் இரயில்வே நிலையத்தை நான்கு வழி இரயில்வே வழித்தடமாக மாற்றிட தேவையான நிலங்களை கையகப்படுத்துவது குறித்தும், அதற்கான செல வினத் திட்ட மதிப்பீட்டை வழங்குமாறும் இரயில்வே துறை முதன்மை பொறியா ளருக்கு அறிவுறுத்தப் பட்டது.

விரிகோடு மேம்பாலம் மார்த்தாண்டம் – விரி கோடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில், ஏற்கனவே மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து புதிய இடத்தைத் தேர்வு செய்து பணிகளைத் தொடங்கிட அனைத்து துறையினருக் கும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், கன்னியா குமரி முதல் களியக்கா விளை வரை உள்ள பழு தடைந்த இரயில்வே பாலங்கள் மற்றும் சாலை களை சீரமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பூங்கோதை, இரயில்வே துறை முதன்மை பொறியா ளர் பவன் குமார், , கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.