தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நலத்திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

13 Jul 2026, 9:45 pm
நலத்திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
<p><strong>நலத்திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 13 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிர தாப், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 13 (திங்கள்) அன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்க ளிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்க ளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத் திற னாளிகளிடமிருந்து 16 கோ ரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர் னான்டோ, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் நிலம் பத்மபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர் கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.