முந்தய பக்கம்

7 புற்றுநோய் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கல்

5 Oct 2026, 9:25 pm
7 புற்றுநோய் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கல்
<p><strong>7 புற்றுநோய் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கல்</strong></p><p>நாகர்கோவில், அக். 5 -கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இதில் கல்வி,பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 393 மனுக்கள்பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 7 புற்றுநோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளிடம் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில்கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட திருநம்பி பெனிஷ்மைக்கேலுக்கு பணிநியமனஆணையும் வழங்கப்பட்டது.</p><p>இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, தனித்துணை ஆட்சியர்சமூக பாதுகாப்பு திட்டம் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் பத்மபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார், மாவட்டசமூக நல அலுவலர் காயத்ரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், உதவிஆணையர் கலால் ஈஸ்வரநாதன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram