குமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை
31 May 2026, 10:16 pm

குமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை

நாகர்கோவில், மே 31- கன்னியாகுமரி மாவட்டத்தை முழு வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றிட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவ ராக மு.பிரதாப் மே 31 அன்று ஆட்சி யர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்று கொண்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிர தாப் செய்தியாளர்களிடம் கூறியதா வது: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இதர அரசு அலுவலகங்களுக்கோ வரும் பொதுமக்களிடம் துறை அலுவலர்கள் முறையாகவும் கனி வோடும் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், மக்கள் தங்களின் கோரிக் கைகளோடு வரும் பொழுது, அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதி யான மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

அதற்காக அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் சார்ந்த பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்ற இலக்கோடு மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டத் தில் சுற்றுலாத் தலங்கள் அதிகமாக இருக்கின்றன.

வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் மாவட்டமாக இது திகழ்கிறது.

அவர் களுக்குத் தேவையான பல்வேறு முன்னெடுப்புகள் ஏற்கனவே மேற் கொள்ளப்பட்டிருந்தாலும், அவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் என்னென்ன திட்டங்களைச் செயல் படுத்த வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களோடு ஆலோசிக்கப் படும்

. உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வரும்போது அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதும், இன்னும் அதிகமான பய ணிகளைக் கவர வேண்டும் என்ப துமே இதன் நோக்கமாகும்.

எனவே, சுற்றுலாத் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீனவ கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக அளவில் வசிக் கிறார்கள்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீனவ கிராம மக்களின் வாழ் வாதாரங்களை மேம்படுத்தும் வகை யில் பல்வேறு திட்டங்களை அவர் களோடு ஒருங்கிணைந்து, அரசுக்குப் பரிந்துரை செய்து, அவற்றுக்கான தேவைகளைப் பெற்று மீனவ மக்க ளின் மேம்பாட்டிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதேபோல், விவசாயிகள், நெச வாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பணிகளைச் செய்யும் அனைத்து மக்களின் கோரிக்கைகளை யும் நம்முடைய மாவட்ட நிர்வாகத் தின் மூலமாக அரசுக்குப் பரிந்துரை செய்து, அந்தப் பணிகளும் விரை வாக நிறைவேற்றப்படும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கியக் கட்ட மைப்புப் பணிகளான சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட அனைத் துப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் முன்னேற்றப் போக் கினைக் கண்காணித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அர்ப்பணிக் கும் வகையில் அந்தந்தப் பணிகள் முடுக்கிவிடப்படும்.

அனைவரின் ஒத்துழைப்போடு, தமிழ்நாடு அளவில் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்துத் துறைகளி லும் மிகவும் வளர்ச்சி அடைந்த மாவட்டமாகத் திகழவும், மேலும் சிறந்த பல வளர்ச்சிகளைப் பெற்று முதன்மை இடத்தை அடைய வேண் டும் என்ற நோக்கத்தோடும் நம் மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கையை அதிகரிப் பதுடன், அவர்களின் வருகைக்கான அனுபவத்தையும் மேம்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்போது, அவர் கள் மீண்டும் மீண்டும் இங்கு வருவது டன் மற்றவர்களிடமும் இதைப் பகிர்ந்துகொள்வார்கள். அதற்கேற்ப புதிய திட்டங்கள் விரைவில் வகுக்கப் பட்டுச் அவை விரைவாக செயல் படுத்தப்படும்.

மாவட்ட நிர்வாகம் முன் னெடுக்கும் பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் அ.பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.