போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக “மாற்றம்” புதிய திட்டம் லோகோவை வெளியிட்டு குமரி ஆட்சியர் துவக்கி வைத்தார்
24 Jun 2026, 9:37 pm
<p><strong>போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக “மாற்றம்” புதிய திட்டம் லோகோவை வெளியிட்டு குமரி ஆட்சியர் துவக்கி வைத்தார்</strong> </p><p>நாகர்கோவில்,ஜூன் 24- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் மாற்றம் மாற்றம் (THE CHANGE) துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மரு.ஆர்.ஸ்டாலின் முன்னிலையில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் ஜூன் 23 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், போதைப்பொருள் எதிர்ப்பு லோகோவினை அறிமுகப்படுத்தி, பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில், இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றம் என்னும் உன்னதமான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.குமரி மாவட்டமானது கல்வியில் சிறந்து விளங்கி, பல அறிவார்ந்த ஆளுமைகளை உருவாக்கிய பெரு மைக்குரிய மாவட்டமாகும். இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில், போதைப்பொருள் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞர்களின் முன்னேற்ற மும், மாற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலையும், விற்பனையையும் தடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் ஒரு கை என்றால், ‘போதைப்பொருள் எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பது மாணவர்களாகிய உங்களின் மற்றொரு கை. இந்த இரு கைகளும் இணைந்தால் மட்டுமே மாவட்டத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு</p>
