தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வியில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காமராஜர் விருது “காஃபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஆட்சியர் வழங்கினார்

8 Jul 2026, 9:17 pm
கல்வியில் சிறந்து விளங்கிய பள்ளி  மாணவ- மாணவியர்களுக்கு காமராஜர் விருது  “காஃபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில்  ஆட்சியர் வழங்கினார்
<p><strong>கல்வியில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காமராஜர் விருது “காஃபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஆட்சியர் வழங்கினார்</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவல கத்தின் சார்பில் மாவட்டத் திற்குட்பட்ட மாணவ மாண வியர்களுடன் காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடி பேசியதா வது: மாணவர்கள் தங்களை எப்போதும் தாழ்த்தி மதிப்பி டக் கூடாது. தங்களின் இலக் குகள் எப்போதும் உயர்ந்த தாக இருக்க வேண்டும். உயர்ந்த இலக்குகளை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். தற்போதுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் யூடியூப் போன்ற தொழில்நுட்பங்கள் இருமுனை கத்தி போன்ற வை ஆகும். அதில் நேர்மறை பயன்பாடும் உள்ளது. எதிர் வினை பயன்பாடும் உள்ளது. அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த பயனுள்ள யூடியூப் சேனல்களைப் பார்த்து தங்க ளது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு மற்றும் திரைப்படங்களுக்கு என்று வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும். தேவையற்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல், படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் செல் லும் போதோ அல்லது விடுதி களில் தங்கிப் படிக்கும் போது மாணவர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைக்கி றது. பெற்றோரோ அல்லது மற்றவர்களோ நம்மைக் கண்காணிக்கவில்லை என்றாலும், மாணவர்களு க்குள் ஒரு சுய கட்டுப்பாடு (Self-control) இருக்க வேண்டும். சுதந்திரம் என்பது நல்லது, ஆனால் அது தவறாகப் பயன்படுத் தப்படக் கூடாது. எனவே, மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள நல்ல உள் கட்டமைப்பு மற்றும் ஆசி ரியர்களின் வழிகாட்டுத லைச் சரியாகப் பயன்படு த்தி, பரந்த சிந்தனையுடன் செயல்பட்டு வாழ்க்கையில் பெரிய இடங்களை அடைய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசி னார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்று கல்வியிலும், கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கு வருடந்தோறும் காம ராஜர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2024- 25 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழியில் பயின்று, கற்றல் அடைவுகளிலும் கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய குமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த 15 மாண வர்களுக்கு காமராஜர் விருது பாராட்டு சான்றித ழும், ரூ.10,000 -க்கான காசோ லையும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 15 மாண வர்களுக்கு ரூ.20,000-க்கான காசோலையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.