தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒத்தப்பனை குளம்,பழையாற்றை சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

16 Jul 2026, 9:44 pm
ஒத்தப்பனை குளம்,பழையாற்றை சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
<p><strong>ஒத்தப்பனை குளம்,பழையாற்றை சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் </strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 16- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தி ற்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஜூலை 15 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், வட்டகோட்டை சுற்றுலா தளத்தினை பார்வையிடப்பட்ட தோடு வட்டக்கோட்டையின் அருகில் உள்ள ஒத்தப்ப னை குளம் பார்வையிடப்பட்டது. அங்கு படர்ந்துள்ள பாசி உள்ளிட்ட கழிவுகளை அகற்றி குளத்திலிருந்து செல்லும் உபரி நீரினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டுவர நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த வாய்க்காலில் கடல்நீர் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாற்று வழியினை பரிசீலிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுசீந்திரம் வழியாக செல்லும் பழையாற்றினை ஆய்வுமேற்கொண்டு, தூர்வார துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். முன்னதாக நல்லூர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவ ரிடம் ,இப்பகுதிகளிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களிடம் மட்கும் குப்பை மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டுமெனவும், அவ்வாறு பிரித்து தராதவர்கள் மீது அபராதம் விதிக்க அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.