தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை திறந்துவிடும் வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு நடவடிக்கை

18 Jun 2026, 9:36 pm
பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை திறந்துவிடும்  வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு நடவடிக்கை

பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை திறந்துவிடும் வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு நடவடிக்கை

அலுவலர்களுக்கு குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில்,ஜூன் 18- கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி மற்றும் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஜூன் 18 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சியில் மூலதன மானிய நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டாரிப்பு அளத்தில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிமுடிக்கப்பட்டு, அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ளது. இக்கூடுதல் கட்டிடத்திற்கு வாகனங்கள் எளிதாக செல்ல வழித்தடத்தினை உருவாக்கி, மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் சீரமமின்றி செல்ல பேரூராட்சி உதவி இயக்குநர், செயல் அலுவலர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறையிலிருந்து அழகப்பபுரம் வழியாக வாய்க்காலில் செல்லும் தண்ணீரானது, செங்குளத்தில் சேமித்து வைத்து பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாய்க்கால்களின் கரையோரம் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் திறந்து விடுவதாகவும், அவற்றினை தடுத்திடுமாறும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையின் அடிப்ப டையில் கழிவுநீரை திறந்து விடும் வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டதோடு, வாய்க்காலின் குறுக்கே கான்கீரிட் வழிப்பாதை அமைக்கப்பட்டி ருப்பதையும் அகற்றிடுமாறு துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆற்றில் உறைகிணறு அமைத்து குடிநீர் விநியோகம்

மேலும் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்நகரில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் 10,000 மரங்கள் உள்ளன. 6 அடிக்கு மேல் வளர்ந்த பிறகு அனைத்து மரக்கன்றுகளையும் சாலை ஓரங்களில் நட்டு வைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சடையால்புரம் கிராமத்தில் பழையாறு ஆற்றுப்படுகையில் ரூ.20 இலட்சம் மதிப்பில் உறைகிணறு அமைந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பீமநகரி ஊராட்சியில் அன்னை நகர் பகுதியில் ரூ.18.36 இலட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் செல்லும் அணுகு கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்று வரும் சாலை பணியினை விரைந்து முடித்து, அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார் வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.