கன்னியாகுமரி சுற்றுலாத் தலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை திடீர் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தகவல்
3 Jun 2026, 10:20 pm

கன்னியாகுமரி சுற்றுலாத் தலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை திடீர் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி நகராட் சிக்குட்பட்ட சுற்றுலா பகுதி களில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் ஜுன் 3 புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கன்னியாகுமரி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண் டார்.

பின்னர் ஆட்சியர் கூறிய தாவது: கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்க ளுக்கு உள்நாட்டவர் மட்டுமின்றி வெளிநாட்ட வரும் வருகை தருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது.

எனவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கன்னியாகும ரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சுற்றுலாத் தலங்களை முழு சுகாதா ரத்தோடு வைப்பதோடு, குப்பைகளை ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் கொட்டு வதை தவிர்த்திடும் வகை யில் தேவையான குப்பை தொட்டிகளை வைத்திட நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டதோடு, சுற்றுலாத்தலங்களில் தூய்மைப் பணியாளர்களை தனியாக நியமிக்க நகராட்சி அலுவலருக்கு அறிவுறுத்தப் பட்டது.

சுற்றுலாத்தலங்களில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றி நடை பாதையினை ஒழுங்கு படுத்திட நகராட்சி ஆணை யர் மற்றும் காவல் துறை யினருக்கு அறிவுறுத்தப் பட்டது.

மேலும் திரிவேணி சங்கம் பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் ஆழத்திற்கு சென்று குளிப்ப தை தவிர்ப்பதற்காக கம்பி கள் வைத்து தடுப்பணை வைக்க துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. கன்னியாகுமரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலாத்தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே காணப்படுகிறது

. இத னால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதோடு, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறா கவும் உள்ளது. எனவே மாவட்ட சுற்றுச்சூழல் அலு வலர் சோதனை சாவடி அமைத்து கன்னியாகும ரிக்கு சுற்றுலா வருகை தரும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் அங்கேயே கைப் பற்ற அறிவுறுத்தப்பட்டது

. இரவு நேரத்தில் முழு கண்காணிப்பு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இடையூறாக இருக்கும் கடைகளை அப்புறப் படுத்த இந்துசமய அறநிலை யத்துறை செயல் அலுவல ருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களில் முக்கியமான இடங்களில் இரவு நேரங்களில் காவல் துறையினர் முழு கண்கா ணிப்பில் ஈடுபட துணை காவல் கண்காணிப்பாள ருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுற்றுலாத்தலங்க ளில் மருத்துவக் குழுவினர் இருப்பதை சுகாதாரத்துறை யினர் உறுதி செய்ய அறி வுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரி வித்தார்.

முன்னதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் படகு சவாரி மேற்கொள்ள வரிசையில் நின்ற சுற்றுலா பயணிக ளிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் ஆவின் பால கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆவின் பாலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பால், தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கீரிம் உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.