ஜெர்மன் மொழிப் பயிற்சி முடித்த 6 மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
21 Jul 2026, 9:34 pm
<p><strong>ஜெர்மன் மொழிப் பயிற்சி முடித்த 6 மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 21 - கன்னியாகுமரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஜெர்மன் மொழிப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “தமிழ் நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் “TNSKILL” என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழு வதும் வேலைவாய்ப்பற்ற மற்றும் வேலை யில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் ஹாலோ மொழி மையத்தின் (Halo Language Centre) திறன் பயிற்சி அளிப்போ ரால் செவிலியர் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 45 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி சரளமாக பேச, கேட்க, எழுத மற்றும் மருத்துவ சம்பந்தமான சொற்கள் குறியீடுகள், தகவல் சேகரிக்க உள்ளிட்ட மருத்துவப் பணிகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மொழி பயிற்சியானது (Language Training) A1, A2, B1, B2 என நான்கு நிலைகளிலும், பயிற்சியை முடித்த 6 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள் கிறேன். இப்பயிற்சியின் மூலம் ஜெர்மன் செல்லும் வாய்ப்பினை அவர்கள் பெற்று உள்ளார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>
