தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்டத்தில் நிலப் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டுமனை வழங்குவதில் தாமதம்வெள்ளிச்சந்தை மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் பேச்சு

13 Aug 2026, 10:31 pm
குமரி மாவட்டத்தில் நிலப் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டுமனை வழங்குவதில் தாமதம்வெள்ளிச்சந்தை மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் பேச்சு

குமரி மாவட்டத்தில் நிலப் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டுமனை வழங்குவதில் தாமதம்வெள்ளிச்சந்தை மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் பேச்சு

நாகர்கோவில், ஆக. 13-கன்னியாகுமரி மாவட்டத்தில் நில பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் தாமதம் நிலவினாலும், தகுதியுள்ள நபர்களைக் கண்டறிந்து நிலங்களை ஒதுக்கீடுசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், கல்குளம் வட்டம்வெள்ளிச்சந்தை பகுதியில் ஆகஸ்ட் 13 வியாழனன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்றமாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின்சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்கஅரங்குகளை பார்வையிட்டும், தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடி வருவதைத் தாண்டி, அரசே மக்களைத் தேடிச் சென்றுஅவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்என்பதற்காக மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதற்கு 1-2 வாரங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்களில் உடனடியாகத் தீர்வு காணக்கூடிய பட்டாதிருத்தங்கள், முதியோர் ஓய்வூதியம், புதிய குடும்பஅட்டை உள்ளிட்ட நலத்திட்டஉதவிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சாலை, தெருவிளக்கு மற்றும் பெரிய உட்கட்டமைப்பு கோரிக்கைகள் அரசின் அனுமதிபெற்று விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.

முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட வழங்கல் துறை, கால்நடை பாரமரிப்புதுறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் மு.வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) புஷ்பாதேவி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், துறைஅலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.