தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலோரம்-ஊரக குடியிருப்புகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மே 30-க்குள் முடித்திடுக! அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

20 May 2026, 11:37 pm
கடலோரம்-ஊரக குடியிருப்புகளில் குடிநீர் குழாய்  பதிக்கும் பணிகளை மே 30-க்குள் முடித்திடுக! அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலோரம்-ஊரக குடியிருப்புகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மே 30-க்குள் முடித்திடுக! அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில்,மே 20- தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை வளர்ச்சி திட்டப்பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா மே 20 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கல் குளம், கிள்ளியூர் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட் பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு கூறிய தாவது: கன்னியாகுமரி மாவட்டத் தில் 79 கடலோர குடியிருப்பு கள், 19 வழியோர ஊரக குடி யிருப்புகள் மற்றும் 17 பேரூ ராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுள்ள ஓபிவிசி குழாய்கள் பதிக்கும் பணி கள் கிள்ளியூர் வட்டத்திற் குட்பட்ட மாங்குழி சாலையில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நடைபெற்று வரும் பணிகளை 30.05.2026-க்குள் விரை ந்து முடிக்க துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

தொடர்ந்து கல்குளம் வட்டத்திற்குட்பட்ட திக்க ணங்கோடு முதல் திங்கள் சந்தை வரை (பரசேரி – புதுக் கடை சாலை) 4400 நீளத் திற்கு 500 மி.மீ விட்டமுள்ள டிஐ (DI) குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வரு வதை ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, 30.05.2026-க்குள் பணியினை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பயன் பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் கன்னியாகுமரி – சுசீந்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வழுக்கம்பாறை பகுதியில் நான்கு வழி சாலை அருகே நெடுஞ்சாலைத் துறையால் 150 மி.மீ விட்டமுள்ள டிஐ (DI) குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை 23.05. 2026-க்குள் போக்கு வரத்திற்கு இடையூறின்றி விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் டி.சி. ராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் வி.ஆர். ராஜேஷ் குமார், உதவிப் பொறியாளர் ஜி.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.