முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கிய ஆட்சியர்

16 Jun 2026, 9:20 pm
மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை  மனுக்களை வாங்கிய ஆட்சியர்
<p><strong>மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கிய ஆட்சியர்</strong></p><p>நாகர்கோவில்,ஜூன் 16- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தளத்தில் ஜூன் 16 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. </p><p>இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலை வர் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களிடையே கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை, கடை நடத்த கடனுதவிகள், குடிநீர் இணைப்பு, கருணை அடிப்படையில் வேலை, ரேசன் கார்டு, திறன்பேசி, வீட்டுமனை பட்டா, இலவச வீடு வேண்டி என மொத்தம் 34 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர் கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram