தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

19 May 2026, 10:00 pm
திருச்சி விரைவு செய்திகள்

நாளை குமரியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில்,மே 19- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 21 அன்று பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

அரசு மானிய உதவியுடன் நுண்ணீர் பாசனம் அமைத்திடலாம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

நாகர்கோவில்,மே 19- பயிருக்கு தேவையான பாசன நீர் அறிவியல் முறையில் கணக்கிடப்பட்டு சரியான அளவு மட்டுமே அளிக்கப்படுகிறது. வேர்ப்பகுதியில் மட்டுமே நீர் பாய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் களைச்செடிகளுக்கு நீர் மற்றும் உரச்சத்து கிடைக்காததால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் நீரில் கரையும் உரம், மருந்துகளை நுண்ணீர்ப் பாசன அமைப்பு மூலம் பயிருக்கு அளிப்பதன் மூலம் ஆட்செலவு குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026-27 ஆம் நிதியாண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.73 இலட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், சிறு குறு விவசாயியாக இருப்பின் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி திட்டத்தின் முழுப்பலனையும் பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மையில் சிறப்பாக பங்காற்றியோருக்கு விருது விண்ணப்பிக்க அறிவிப்பு

நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை சம்பந்தமாக பேரிடர் நடவடிக்கைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பேரிடர் தடுப்பு, தணிப்பு, எதிர்நோக்கு நிலை, நிவாரணம், ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் வளர்த்தல் போன்ற வகைகளில் இந்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வாயிலாக ‘Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar” என்ற வருடாந்திர தேசிய விருது வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை இனங்களில் சிறப்பாக பங்காற்றிய தனி நபர்கள், நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட இணையதளமான (

) என்ற இணையதளத்தில் Applications invited for Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar என்ற தலைப்பினை கிளிக் செய்து தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அல்லது awards.gov.in/Home/AwardLibrary என்ற இணையதளத்தில் நேரடியாக தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 30.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நியாயவிலைக்கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

நாகர்கோவில்,மே 19- கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா மே 19 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கோட்டார் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடை நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நியாயவிலைக்கடையின் குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை கேட்டறியப்பட்டது. குடும்ப அட்டைத்தாரர்கள் விரல் ரேகை பதிவு செய்வதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றியும், தரமாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் வேண்டுமென கடை ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து, கடையில் ரேசன் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்கப்படுகிறதா?, “பொருட்களின் தரம் திருப்திகரமாக உள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி, உரிய நேரத்தில் பொருட்களை விநியோ கம் செய்ய வேண்டும் என்றும், கடைகளை தூய்மையா கப் பராமரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

மே 22 நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில்,மே 19- குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது 22.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 22.05.2026 அன்று காலை 10 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.