பாழடைந்து வரும் கன்னியாகுமரி பேருந்து நிலைய தங்கும் விடுதி புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சிஐடியு கோரிக்கை!
24 Jun 2026, 9:38 pm

பாழடைந்து வரும் கன்னியாகுமரி பேருந்து நிலைய தங்கும் விடுதி புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சிஐடியு கோரிக்கை!

நாகர்கோவில், ஜூன் 24- பாழடைந்து வரும் சர்வதேசப் புகழ் பெற்ற கன்னியாகுமரி பேருந்து நிலைய தங்கும் விடுதியைப் புதுப்பித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் சி. சுரேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பேருந்து நிலையம்

தமிழகத்தில் சென்னை மாநகர் நீங்கலாக, ஊட்டி மற்றும் கன்னியாகுமரி யில் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தி ற்குச் சொந்தமான பேருந்து நிலையங்கள் உள்ளன. கன்னியாகுமரியில் அமைந் துள்ள பேருந்து நிலையம், தங்கும் விடுதி மற்றும் உணவகம் ஆகியவை போக்கு வரத்துக் கழகத்திற்கே சொந்தமானவை ஆகும். 1987-இல் தொடங்கப்பட்ட இப்பேருந்து நிலையத்திற்கு, 1989 ஆகஸ்ட் 17 அன்று அப்போதைய முதல்வர் கலைஞரால் ‘கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள தங்கும் விடுதி சூரிய உதயம் மற்றும் மறைவை ரசிப்பதற்கு உகந்த மிகச்சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. தனியார் விடுதிகளுடன் ஒப்பிடும்போது இதன் வாடகை மிகவும் குறைவு. குளி ரூட்டப்பட்ட அறைக்கு ரூ.1,406, சாதாரண அறைக்கு ரூ.1,050 என நிர்வகிக்கப்படும் இவ்விடுதியில், போக்குவரத்துத் தொழிலா ளர்களுக்கு 25 சதவீதக் கட்டணச் சலுகை யும் வழங்கப்படுகிறது.

முறையற்ற பராமரிப்பால் வீழ்ச்சி

தற்போது போதிய பராமரிப்பு இல்லாத தால், தனியார் விடுதிகளுடன் போட்டி போட முடியாமல் இவ்விடுதி திணறி வருகிறது. 11 அறைகள் மற்றும் ஒரு விசாலமான கூட்ட அரங்கம் இருந்தும், தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் கழிவறைகளும் பூட்டப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணாடிப் பாலம் திறக்க வந்தபோது தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்ட இவ்விடுதி, தற்போது மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இவ்விடுதியைத் தனியார் வசம் ஒப்படைக்கப் பலகட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, சிஐடியு-வின் தொடர் போராட்டங்களால் அவை தடுத்து நிறுத்தப்பட்டன.

சிஐடியு முன்வைக்கும் பரிந்துரைகள்

Jஇணையதள முன்பதிவு: ஆன்லைன் மூலம் அறைகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

Jவிளம்பரம் செய்தல்: பேருந்துகளில் தங்கும் விடுதியின் தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் குறைந்த கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

Jநவீன வசதிகள்: விடுதியை முழுமை யாகப் புனரமைத்து நவீன வசதிகள், வாகன நிறுத்த வசதி மற்றும் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

Jபணியாளர்கள் நியமனம்: சுகாதா ரம் பேணப்பட வேண்டும்; சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பலமொழி கள் தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

Jபேருந்து நிலையச் சீரமைப்பு: குண்டும் குழியுமாக இருக்கும் பேருந்து நிலையச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். எனவே, தமிழக அரசும், அரசுப் போக்கு வரத்துக்கழக நாகர்கோவில் மண்டல நிர்வா கமும் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, மக்கள் சொத்தான இவ்விடுதி யைப் பாதுகாத்து மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.