குமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகள் மூடல்;வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்
2 Nov 2026, 10:34 pm

குமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகள் மூடல்;வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்புநாகர்கோவில், நவ.2 -கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென 50-க்கும்மேற்பட்ட செங்கல் சூளைகள் மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 700 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைகள் முற்றிலும் நலிவடைந்த நிலையில் அல்லது மூடப்பட்ட நிலையில் மாற்றுத் தொழிலாக பலருக்கும் செங்கல் சூளைகளே வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, செங்கல் சூளைகள் அரசின் அனுமதிபெறவில்லை எனக் காரணம்காட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தோவாளை தாலுகாவில் மட்டும் அவ்வாறு மூடப்பட்ட 32 செங்கல் சூளைகளில் பெரும்பாலானவற்றை செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்ட சூளை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் முறையான அனுமதி கோரி அளித்தமனுக்கள் பல மாதங்களாக கனிம வளத்துறையால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. சீல் வைக்கப்பட்ட சூளைகளில் பல்லாயிரக்கணக்கான செங்கற்கள் மழையில் நனைந்து வீணாகி விட்டன.

தொழிலாளர்கள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தீபாவளி நேரத்தில் அந்த குடும்பங்கள் பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளன. உரிமம் அளித்துமுறைப்படுத்த வேண்டிய அதகாரிகள் தொழிலாளர்களின் அவல நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். எங்களது விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து தொழிலை நடத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் செங்கல் சூளைகள் மூடப்பட்டதால் வேலையிழந்துள்ள சுமார் 500 தொழிலாளர்கள் நவ.2திங்களன்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் குவிந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சிரிடம் அளித்த மனுக்களில், “திடீரென சீல் வைக்கப்பட்டதால் வருவாய் இழந்து தங்களது பிள்ளைகளின் உணவு, கல்வி போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றமுடியாமல் தவிப்பதாகவும், செங்கல் சூளைகளுக்கான முறையான உரிமம் பெற காலஅவகாசம் அளித்து தொடர்ந்து அவை செயல்பட அனுமதித்து தங்களுக்கு வேலை கிடைப்பதைஉறுதிப்படுத்துமாறு” கேட்டுக் கொண்டுள்ளனர்.