படகுப் போக்குவரத்தை சீராக்க தூர்வாரும் பணி
9 Oct 2026, 11:37 pm
<p><strong>படகுப் போக்குவரத்தை சீராக்க தூர்வாரும் பணி</strong></p><p>கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தடையின்றி படகு போக்குவரத்து மேற்கொள்ள தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சொந்தமாக ரூ.67 லட்சம் செலவில் புதிய தூர்வாரும் இயந்திரத்தை வாங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த தூர்வாரும் இயந்திரம் மூலம் கன்னியாகுமரி படகு தளத்தில் தூர்வாரும் பணி அக்டோபர் 9 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது.</p>
