சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படும்: குமரியில் அணு கனிமச் சுரங்க திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்திடுக!
3 Jul 2026, 8:28 pm

சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படும்: குமரியில் அணு கனிமச் சுரங்க திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்திடுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் குமரி மாவட்டக்குழு கோரிக்கை

நாகர்கோவில், ஜூலை.3- குமரியில் அணுகனிமச் சுரங்கத் திட்டத்துக் கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் குமரி மாவட்டக்குழு கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.பாண்டி, மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் பல்வேறு கடலோர கிராமங்களில் அணுகனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான அனுமதியினை வழங்கக்கூடாது என்று மக்கள் பல ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகும். கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமங்களை புகுந்து விவசாயம் அழிவுக்குள்ளாக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் இத்திட் டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் வலி யுறுத்தியதுடன் ஏராளமான போராட்டங்களும் நடைபெற்றது. மேலும் வி.வி.மினரல்ஸ் போன்ற பல தனியார் நிறுவன உரிமையாளர்கள் அரசின் ஊசலாட்டத்தை பயன்படுத்தி சட்ட விரோதமான முறையில் உரிய அனுமதி எதுவும் இல்லாமல் கன்னியாகுமரி மற்றும் பக்கத்து மாவட்டத்தில் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் அபூர்வ தாதுமணல்களை அபகரித்தார்கள். இதற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் நீதி மன்றம் தலையிட்டு சட்டபூர்வமற்ற முறையில் சேகரிக்கப்பட்ட தாதுமணலை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திட தடைவிதித்தது. அதனை மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்இஎல்- க்கு கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

தாதுமணலை தனியாரிடமிருந்து மீட்டிடுக!

இப்பின்னணியில் தனியார் முதலாளிகளால் அபகரிக்கப்பட்ட 38.77 லட்சம் மெட்ரிக்டன் தாதுமணலானது அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கருத முடிகிறது. ஆனால் இதுவரை மேற்படி அறிவுறுத்தலானது நடை முறைக்கு வரவில்லை. தனியார் முதலாளி களால் அபகரிக்கப்பட்ட தாதுமணல் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப் படுகிறது. எனவே மேற்படி தாதுமணலை தனி யாரிடமிருந்து மீட்டு ஐஆர்இஎல் (IREL)-க்கு ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் இப்பிரச்சனையில் 2024 ஆம் ண்டு நவம்பரில் நடந்த தவெக செயற்குழு கூட்டமானது குமரி மாவட்ட கடற்கரை கிராமங்க ளின் அரியவகை தாதுமணலை எடுப்பதை தடுக்க வேண்டுமென்று ஆளும் அரசுகளை கேட்டுக் கொண்டு தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு இசைவான முறையில் மண வாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனம் பெற்றி ருந்த அனுமதியை காலாவதியாகும் கடைசி நாளான ஜூன் 10 ஆம் தேதி ஓராண்டு காலத்தி ற்கு நீட்டிப்புக்கான ஆணையினை தமிழக அரசு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடற்கரை கிராமங்களில் அணு கனிம சுரங்கம் திட்டம் அமலானால் ஏற்படுகின்ற பாதுகாப்பற்ற நிலை குறித்து அச்சம் இன்ன மும் மாறவில்லை; மாற்றப்படவில்லை. எனவே இவைகளை முற்றிலும் கவ னத்தில் கொள்ளாமல் தமிழக அரசு குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அணு கனிமச் சுரங்க திட்டத்திற்கு வழங்கிய அனுமதி யை மறு பரிசீலனை செய்து ரத்து செய்வது டன், வருங்காலத்திலும் இதுபோன்ற அணு கனிம சுரங்க திட்டத்தினை குமரி மாவட்ட கிராமங்களில் அனுமதிக்க மாட்டோம் என்ற அறிவிப்பினையும், தமிழக அரசு கடற்கரை வெளியிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.