வேலை உறுதித்திட்டத்தை மீண்டும் அமலாக்கிடுக!
11 Oct 2026, 10:10 pm

வேலை உறுதித்திட்டத்தை மீண்டும் அமலாக்கிடுக!

நாகர்கோவில், அக்.11- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 7 ஆவது மாநாடு, ஈத்தாமொழியில் அக்டோபர் 10 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் என். எஸ். கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். தங்கப்பன் கொடியேற்றினார். எஸ். சிவகோபன் வரவேற்றார்.மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் தொடங்கி வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சங்கத்தின் மாநிலத்தலைவருமான எம். சின்னத்துரை பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். லீமாறோஸ், சிஐடியு மாவட்டச்செயலாளர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பிருமான ஏ.லாசர் நிறைவுரையாற்றினார். எஸ். மிக்கேல் நாயகி நன்றி கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு

28 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டத் தலைவராக ஆர்.லீமாறோஸ், செயலாளராக மலைவிளை பாசி, பொருளாளராக குமரேசன் தேர்வு செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மீண்டும்

அமலாக்க வேண்டும் .ஆட்சேபணைக்குரிய அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நில வகைமாற்றம் செய்து இலவச வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.