தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமை போதகர் கொலை வழக்கில் குமரியை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்

30 Jun 2026, 8:55 pm
தலைமை போதகர் கொலை வழக்கில்  குமரியை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்
<p><strong>தலைமை போதகர் கொலை வழக்கில் குமரியை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்</strong></p><p>நாகர்கோவில்,ஜூன் 30- தூத்துக்குடி மில்லர்புரத்தில் பெந்தெகொஸ்தெ சபை இயங்கி வருகிறது. இந்த சபையின் தலைமை போதகராக சென்னை பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் ரோட்டை சேர்ந்த கனகராஜ் (73) என்பவர் பணியாற்றி வந்தார். 2016 ஆம் ஆண்டு இங்கு சபை ஊழியராக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் வாத்தி யார்விளையை சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததை, தலைமை போதகர் கனகராஜ் மற்ற ஊழியர்களிடம் தெரிவித்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ், உதவி போதகர் ஜான்தாமஸ் (57) ,டைட்டசின் சகோதரர் அண்டோ (39), நாகர்கோவில் கோட்டார் ராமசாமிநகரை சேர்ந்த ரகு (45) ஆகியோருடன் சென்று சபையின் மாடியில் ஓலைக் கொட்டகையில் படுத்திருந்த தலைமை போதகர் கனகராஜை தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை குளிப்பாட்டி வேறு உடை அணிந்து பிரார்த்தனை கூடத்துக்கு கொண்டு வந்து தடயத்தை மறைக்க முயன்றனர். இதுகுறித்து தலைமை போதகரின் உறவினர், சென்னையை சேர்ந்த சுதர்சனம் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக் குடி சிப்காட் போலீசார் கொலை வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை காலத் தில், உதவி போதகர் ஜான் தாமஸ் இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட் டப்பட்ட சபை ஊழியர் டைட்டஸ், அண்டோ,ரகு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், டைட்டசுக்கு ரூ.13 ஆயிரத்து 500, அண்டோவுக்கு ரூ.6 ஆயிரம், ரகுவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக் கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிர காசம் ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் கொலை யாளிகள் பயன்படுத்திய வழக்கு சொத்துக்களான கார், செல்போன்களை அரசுடைமையாக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.