தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: குமரி மாவட்டத்தில் 97.30 சதவீதம் பேர் தேர்ச்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

20 May 2026, 9:55 pm
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: குமரி மாவட்டத்தில் 97.30 சதவீதம் பேர் தேர்ச்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: குமரி மாவட்டத்தில் 97.30 சதவீதம் பேர் தேர்ச்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

நாகர்கோவில்,மே 20- தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழு திய மாணவ மாணவியர்க ளுக்கான தேர்வு முடிவுகள் மே 20 அன்று தமிழ்நாடு அரசுத்தேர்வு கள் இயக்ககத்தால் வெளி யிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5 ஆவது இடத்தினை எட்டியமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, குறள் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மற்றும் மாவட்ட கல்வி அலு வலர்கள் உள்ளிட்ட கல்வி அலு வலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதில் ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படித்த 10,615 மாணவர்க ளும், 10,733 மாணவிகளும் என மொத்தம் 21,348 மாணவ மாண வியர்கள் தேர்வு எழுதினர். அதில் 10,214 மாணவர்களும், 10,557 மாணவியர்களும் என மொத்தம் 20,771 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 97.30 சதவீதம் பெற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் 3100 மாணவர்களும், 3039 மாணவிக ளும் என மொத்தம் 6139 மாணவ மாணவியர்கள் எழுதினர். அதில் 2921 மாணவர்களும், 2955 மாணவி களும் என மொத்தம் 5876 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 95.71 சதவீதம் பெற்று தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் அளவில் குமரி மாவட்டம் 7 ஆவது இடம் பெற்றுள்ளது. இவற்றில் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியினர் நலத்துறையின் கீழுள்ள பள்ளி களில் பயின்ற மாணவ, மாணவி யர்கள் 98.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளர். மேலும் வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் இவற்றில் எந்த பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை கண்டறிந்து அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்து, அப் பாடப்பிரிவுகளில் தனிக்கவனம் செலுத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத் தப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்க ளுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ மாணவியர்களுக்கு உறுத் துணையாக இருந்து ஊக்கப் படுத்திய பெற்றோர்களுக்கும் என பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மே 22 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல்

அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பினைத் தவறவிட்ட மாணவ மாணவியர்களுக்கு போதி யப் பயிற்சி அளித்து, மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றி பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாயிலாக வழி வகை செய்யப்படும். தற்காலிக மதிப்பெண் பட்டியல் 22.05.2026 முதல் வழங்கப்படும். விடைத்தாள் ஸ்கேன் நகலுக்கான விண்ணப்பம் 22.05.2026 முதல் 27.05.2026 வரை பெற்றுக்கொள்ளப்படும். துணைத் தேர்வு அட்டவணை 08.07.2026 முதல் 15.07.2026 வரை தேர்வு கள் நடைபெறும். துணைத் தேர்வுக் கான விண்ணப்பம் 26.05.2026 முதல் 09.06.2026 வரை. மறுமதிப்பீடு / மறுகூட்டல் விண்ணப்பம் 17.06.2026 முதல் 19.06.2026 வரை பெற்றுக்கொள்ளப்படும். தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் (நாகர்கோவில்), சௌந்தர ராஜா (மார்த்தாண் டம்), அஜிதா (தனியார் பள்ளி கள்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியா ளர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து

சிபிஎம் பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.செல்ல சுவாமி, தேர்ச்சிபெற்று, சாதனை புரிந்த மாணவ,மாணவியர் களுக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.