தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காந்தையாறு பாலப் பணிகள் மீண்டும் தீவிரம்

11 Jun 2026, 12:59 am
காந்தையாறு பாலப் பணிகள் மீண்டும் தீவிரம்

காந்தையாறு பாலப் பணிகள் மீண்டும் தீவிரம்

மேட்டுப்பாளையம், ஜூன் 10- காந்தையாற்றில் தேங்கியிருந்த நீரால் தற்காலிக மாக பாதிக்கப்பட்டிருந்த பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மின் மோட்டார்கள் மூலம் ஆற்றில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப் பட்டு, ஆற்றின் நடுப்பகுதியில் பாலத்திற்கான தூண் கள் (பில்லர்கள்) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சிறுமுகை பகுதியில் உள்ள லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே காந்தை யாறு ஓடுகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே உயரம் குறைவாக கட்டப்பட்டிருந்த பழைய பாலம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது தண்ணீருக்கடியில் மூழ்குவதால் புதிய பாலம் கட்டத்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்ட ரூபாய் 15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி பணிகளை துவக்கியது

இரண்டு ஆண்டுக ளில் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பணிகள் தாமதமானது. தற் போது சுமார் எண்பது சதவீத பணிகள் நிறைவ டைந்து மொத்தமுள்ள ஆறு பில்லர்களில் ஐந்து பில்லர்கள் அமைக்கப்பட்டு ஆற்றின் நடுவே அமைக்க வேண்டிய ஆறாவது பில்லர் அமைக்கும் பணி துவங்கிய போது அப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்த காரணத்தால் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது தண்ணீர் குறைந்ததால் மீண்டும் பணி கள் முழு வேகத்தில் துவங்கிய போதும் ஆற்றின் நீரூற்று காரணமாக பில்லர் அமைக்கும் இடத்தில் நீர் சூழ்வதால் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு பணிகள் தொடர்கின்றன. இப்பகுதியில் பருவ மழை பெய்ய துவங்கினால் பணிகள் மீண்டும் முடங்கி விடும் வாய்ப்புள்ளதால் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.