வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கான்பூர் கோல்டி மசாலா ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்
30 May 2026, 9:16 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கான்பூர் கோல்டி மசாலா ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்

“மசாலா தயாரிக்கும் எங்களால் உணவுக்கு வழிவகை செய்ய முடியவில்லையே”

வேலைநிறுத்தம் 43

கான்பூர், மே 30- ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் சச்சேந்தி பகுதியில் அமைந்துள்ள பகவதி புட்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் தொடர் வர்க்கப் போராட்டங்களைத் தொடர்ந்து, வடஇந்தியாவின் மிக முக்கியத் தொழில்துறை மையமான கான்பூரில் மீண்டும் தொழிலாளர்களின் போர்க் கணமிக்க எழுச்சி வெடித்துள்ளது. கான்பூரின் மந்தனா - பித்தூர் (Man dhana–Bithoor) தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோல்டி மசாலா (Goldiee Masala) தொழிற்சாலை யின் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், ஊதியக் குறைவு மற்றும் மனிதநேய மற்ற பணிச்சூழலுக்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி தங்களின் உரிமைகளை நிலை நாட்டியுள்ளனர்.

வடஇந்தியா முழுவதும் பரவலாக விற்பனையாகும் பாக்கெட் மசாலா தயா ரிப்பில் முன்னணியில் இருக்கும் கோல்டி மசாலா நிறுவனத்தின் மந்தனா கிளையில், மசாலா அரைத்தல், தரம் பிரித்தல், பேக்கேஜிங் மற்றும் ஏற்றி இறக்குதல் போன்ற பணிகளில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்குப் பல ஆண்டு களாக ஊதியம் உயர்த்தப்படாதது, கூடுதல் நேரப் பணிக்கான ஊதியப் பட்டுவாடாவில் ஏற்படும் தேவையற்ற தாமதம், போனஸ் மற்றும் இதர சலு கைகள் மறுக்கப்படுவது ஆகிய வற்றுக்கு எதிராகப் பெண் தொழி லாளர்கள் இப்போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றி, தலைமை தாங்கி வழிநடத்தினர். நிர்வாகத்தின் அலட்சி யப் போக்கைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

தேசிய நெடுஞ்சாலையில் வெடித்த வர்க்கக் கொந்தளிப்பு

உள்ளூர் இந்தி ஊடகங்களின் செய்தி அறிக்கைகளின்படி, பண்டிகைக் காலங்களில் வடஇந்தியா முழுவதும் மசாலா மற்றும் பாக்கெட் உணவுகளின் தேவை அதிகரிக்கும் போது, தொழி லாளர்கள் நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை கடுமை யான வேலைப்பளுவுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு பார்க்கப்படும் கூடுதல் நேர வேலைக்கு முறையான ஊதியம் வழங்கப்படு வதில்லை. மாறாக, வருகைப் பதி வேட்டைக் காரணம் காட்டி ஊதியப் பிடித்தம் செய்வதும், மேற்பார்வையா ளர்களின் கடுமையான பணி நெருக்கு தல்களும் அண்மைக்காலமாக ஆலைக் குள் அதிகரித்து வந்துள்ளன.

தங்களின் குறைகள் குறித்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்விதப் பதிலும் கிடைக்காத நிலை யிலேயே, தொழிலாளர்களின் பொறுமை இன்றி இந்தக் கொந்தளிப்பு வெடித்துள்ளது. ஆலை வாயிலில் திரண்ட தொழிலாளர்கள் திடீரென மந்தனா பகுதிக்கு வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்று, போக்குவரத்து முற்றி லும் ஸ்தம்பித்தது. நிலைமை தீவிர மடைந்ததைத் தொடர்ந்து, மேற்கு மண்டல துணை காவல் ஆணையர் தலைமையிலான பெரும் காவல் படை யினரும், தொழிலாளர் நலத்துறை அதி காரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அடிமட்டத் தொழிலாளர்களின் குமுறல்களும் பெண் தொழிலாளர்களின் எழுச்சியும்

ஆலையின் உள்ளே நிலவும் உழைப்புச் சுரண்டல் குறித்துப் போராட் டத்தில் பங்கேற்ற பெண் தொழிலாளர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தங்களின் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“நாடு முழுவதும் விற்கப்படும் மசா லாப் பொருட்களை எங்கள் கைகளால் தான் தயாரிக்கும். ஆனால், கடுமை யான விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு களுக்கு மத்தியில், இந்தச் சொற்பக் கூலியை வைத்துக்கொண்டு எங்களால் எங்களின் குடும்பத்திற்கு முறையான உணவைக் கூட வழங்க முடியாமல் தவிக்கிறோம்” என்று பெண் தொழிலாளி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

பாக்கெட் உணவு மற்றும் மசாலாத் தயாரிப்புத் துறையில் தரம் பிரித்தல் மற்றும் பேக்கிங் போன்ற கடினமான பணிகளில் பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே பணியமர்த்தப்படு கின்றனர். ஆனால், அவர்களே ஒட்டு மொத்த உற்பத்தி அமைப்பிலும் மிகக் குறைந்த ஊதியம் பெறும் பிரிவினராக வைக்கப்பட்டுள்ளனர் என்பதை இப்போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒப்பந்த உழைப்பு முறையினாலும், முறையான தொழிற்சங்கப் பாதுகாப்பு இல்லாததாலும் தங்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாகத் தொழிலாளர்கள் குமுறினர்.

பேச்சுவார்த்தையும் அரசு வழிகாட்டுதல் உறுதிமொழியும்

தேசிய நெடுஞ்சாலை முற்றுகை மற்றும் உற்பத்தி முடக்கத்தைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகப் பிரதிநிதி களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் குழுக்களுக்கும் இடையே அவசர முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், பெண் தொழிலாளர்களின் கோ ரிக்கைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இறுதியில், தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள ஊதியம், கூடுதல் நேரப் பணிக்கான நிலுவைத் தொகை மற்றும் போனஸ் ஆகிய அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுத லின்படி முறையாக வழங்கப்படும் என்று ஆலை நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. மேலும், ஆலை வளாகத்திற்குள் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும், பணிச்சூழல் மேம்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினர்.

தொழில்வளர்ச்சியின் போலி முகமும் தொடரும் வர்க்க விழிப்புணர்வும்

கான்பூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மாவட்டங்களில் உணவு பதப் படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் நுகர்பொருள் (FMCG) சார்ந்த துறைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஒரு காலத்தில் தோல் மற்றும் ஜவுளித் தொழிலுக்குப் புகழ்பெற்ற கான்பூர், தற்போது புதிய தொழில்துறை மைய மாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்தத் தொழில்வளர்ச்சியின் அடித்தள மாக விளங்கும் உழைக்கும் வர்க்கத்தி ற்கு, குறிப்பாக கிழக்கு உத்தரப் பிர தேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநி லங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு, எவ்விதப் பணிப் பாதுகாப்போ, கண்ணியமான வாழ்வாதாரமோ கிடைப்பதில்லை என்பதையே சச்சேந்தி, மந்தனா போன்ற பகுதிகளில் தொடர்ச்சி யாக வெடிக்கும் போராட்டங்கள் காட்டுகின்றன.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதலே நொய்டா, புலந்த்சாகர், கான்பூர் தேஹாத் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல்வேறு உற்பத்தி மண்டலங்களில் குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி , தொழிலாளர் அரசு காப்பீடு மற்றும் விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக அணிதிரண்டு வரு கின்றனர். சச்சேந்தி பகுதியின் ஸ்பன் மைக்ரோ பிராசஸிங், பகவதி புட்ஸ், கே பிளாஸ்டிக்ஸ் ஆலைகளைத் தொடர்ந்து தற்போது கோல்டி மசாலா ஆலை யிலும் வெடித்துள்ள இந்தத் தொழி லாளர் எழுச்சி, வடஇந்தியத் தொழிற் பேட்டைகளில் பரவி வரும் புதிய வர்க்க விழிப்புணர்வின் தெளிவான அடை யாளமாகும்