கான்பூர் பகவதி புட்ஸ் பிஸ்கட் ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம் “இந்த சொற்பக் கூலியை வைத்துக் கொண்டு எங்களால் வாழ முடியாது”
29 May 2026, 10:05 pm

கான்பூர் பகவதி புட்ஸ் பிஸ்கட் ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம் “இந்த சொற்பக் கூலியை வைத்துக் கொண்டு எங்களால் வாழ முடியாது”

வேலைநிறுத்தம் 42

கான்பூர், மே 29 - ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தொடர் வர்க்கப் போராட்ட ங்களைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக முக்கியத் தொழில்துறை மையமான கான்பூரிலும் தொழிலாளர் களின் போர்க்குணமிக்க எழுச்சி வெடித்துள்ளது.

கான்பூரின் புறநகர்ப் பகுதியான கிசான் நகர் அருகேயுள்ள சச்சேந்தி (Sachendi) தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பகவதி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் பிஸ்கட் ஆலையின் தொழி லாளர்கள், உழைப்புச் சுரண்டல் மற்றும் மனிதநேயமற்ற பணிச்சூழலுக்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்தப் போரா ட்டத்தை நடத்தி தங்களின் உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர். பிரிட்டானியா (Britannia) பிஸ்கட் நிறுவனத்தின் தயாரிப்பு உரிமம் பெற்று, சச்சேந்தி தொழில் மண்டலத்தில் இரண்டு உற்பத்திப் பிரிவுகளுடன் இயங்கி வரும் பகவதி புட்ஸ் ஆலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

தங்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம், ஊதியப் பட்டுவாடாவில் ஏற்படும் தேவை யற்ற தாமதம், கூடுதல் நேரப் பணிக்கான ஊதியம் வழங்காமை மற்றும் மேற்பா ர்வையாளர்களின் அவமதிப்பான நட த்தைகளுக்கு எதிராக நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டு தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர்.

கிசான் நகர் நெடுஞ்சாலையில் வெடித்த வர்க்கக் கொந்தளிப்பு உள்ளூர் இந்தி ஊடகங்களின் செய்தி அறிக்கைகளின்படி, ஊதியம் மற்றும் பணிச்சூழல் தொடர்பாகத் தொழிலாளர்கள் தரப்பில் நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எவ்விதப் பதிலும் கிடைக்காத நிலையிலேயே இந்தத் தொழி லாளர் கொந்தளிப்பு வெடித்துள்ளது.

உறைவிடம், உணவு, போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில், தங்களின் உழைப்பிற்கான கூலி மட்டும் மிகக் குறைந்த அளவிலேயே நீடிப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், உணவு இடைவேளை நேரங்களைக் கணக்கிட்டு ஊதியத்தைக் கழிப்பது, கூடுதல் நேரப் பணிகளுக்கு முறையான ஊதியம் வழங்காமை போன்ற முறைகேடுகளும் இவ்வாலை யில் தடையின்றி அரங்கேறி வந்தன.

காலை நேர ஷிஃப்ட் தொடங்கும் வேளையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆலை வாயிலில் ஒட்டுமொத்தமாகத் திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

கிசான் நகர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இவ்வா லையில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சசேந்தி தொழில் வழித்தடத்தில் போக்குவரத்து முடங்குவதைத் தடுக்க கான்பூர் நகர உதவி காவல் ஆணையர் தலைமையிலான பெரும் காவல் படை ஆலை வாயிலில் குவிக்கப்பட்டது.

பகவதி புட்ஸ் ஆலையில் வெடித்த இந்தத் தொழிலாளர் எழுச்சியின் தாக்கத்தால், பார்லே-ஜி (Parle-G) பிஸ்கட் தயாரிப்பு உரிமம் பெற்ற அண்டை ஆலையான ஸ்ரீ அம்பாஜி புட்ஸ் (Shri Ambaji Foods) நிறுவனத்தின் தொழி லாளர்களும் போராட்டத்தில் குதிக்க முயன்றனர். எனினும், அங்குள்ள நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என அவசரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உழைப்பு நெருக்குதல்களும் அடிமட்டத் தொழிலாளர்களின் குமுறல்களும் ஆலையின் உள்ளே நிலவும் கடுமையான பணிநெருக்குதல்கள் குறித்துப் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் உள்ளூர் ஊடகங்களி டம் தங்களின் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஆலையில் போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், உற்பத்தி இலக்குகளை நிர்வாகம் தன்னிச்சையாக அதிகரித்ததாகவும், பணி நேரங்களில் மேற்பார்வை யாளர்கள் தொழிலாளர்களை வார்த்தை களால் வதைப்பதாகவும் அவர்கள் முறை யிட்டனர்.

தங்களின் குறைகளைக் கேட்பதற்கோ அல்லது புகார்களைப் பதிவு செய்வதற்கோ எவ்வித முறை யான பாதுகாப்பு வழிமுறைகளும் ஆலைக்குள் இல்லை என்றும், விலைவாசி உயர்விற்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்படாததால் குடும்பச் செலவு களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் தொழிலாளர்கள் குமுறினர்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளும் தொழிலாளர்களின் இந்தத் தீரமிக்க போராட்டத்தையும், உற்பத்தி முடக்கத்தை யும் தொடர்ந்து, உள்ளூர் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலை நிர்வாகப் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் குழுக்களுக்கும் இடையே அவசர முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை யின் முடிவில் தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கைகள் அனைத்தும் நிர்வாகத்தால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள் பின்வருமாறு:

• ஆலைகளில் சட்டப்பூர்வமான 8 மணி நேர வேலைமுறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். இதன் கீழ் சாதா ரணத் தொழிலாளர்களுக்கு 13,600 ரூபாயாகவும், பகுதித் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு 15,080 ரூபாயாகவும், எந்திர இயக்குநர்களுக்கு (Operators) 16,800 ரூபாயாகவும் மாத ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

• தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதாந்திர ஊதியச் சீட்டு (Salary Slip) முறையாக வழங்கப்படும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகத் தரப்பில் 12 சதவீதப் பங்களிப்பு செலுத்தப்படுவதோடு, வைப்பு நிதி இருப்புடன் இணைக்கப்பட்ட போனஸ் தொகையும், ஆண்டுதோறும் முறையான ஊதிய உயர்வும் வழங்கப்படும்.

• மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழ மைகளும் சம்பளத்துடனான வாரா ந்திர விடுமுறை நாட்களாக அறிவிக்கப் பட்டுள்ளன. வார விடுமுறை நாட்களி லும், இதர பொது விடுமுறை நாட்களி லும் வேலை செய்யும் தொழிலாளர் களுக்குச் சட்டப்படியான இரட்டை வீத கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்.

• பணி நேரங்களில் அல்லது ஆலை வளாகத்தில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளுக்கு உள்ளாகும் தொழி லாளர்களுக்கு நிர்வாகமே முழுமை யான மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும்.

இந்த உடன்பாடுகளின் பயன்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் முதலே தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் எனத் தொழிலா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொழில்வளர்ச்சியின் போலிமுகமும் தொடரும் வர்க்க விழிப்புணர்வும் கான்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், கட்டுமானப் பணிகள் மற்றும் வெப்ப மின் நிலையங்கள் போன்ற துறைகளில் ஒப்பந்த உழைப்புச் சுரண்டலும், குறைந்த ஊதிய முறையும் பரவலாக நீடித்து வருவதையே சச்சேந்தி ஆலை வேலைநிறுத்தம் காட்டுகிறது.

தொழில்துறை பெருவழிகளும், உற்பத்தி வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளங்களாகக் கட்டமைக்கப்பட்டாலும், அதன் அடித்தளமாக விளங்கும் உழைக்கும் வர்க்கம் இன்னும் பணிப் பாதுகாப்பற்ற, கண்ணியமற்ற சூழலிலேயே வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறது என்பதை இப்போராட்டம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

மாலை வேளையில் பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து தொழி லாளர்கள் கலைந்து சென்ற போதிலும், ஆலை வளாகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் முறையாக அமல்படுத்தப்படாவிட்டால் மீண்டும் வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் எனத் தொழிற்சங்க அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தி லெப்ட் வியூஸ்