முந்தய பக்கம்

கானூர் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

10 Mar 2026, 3:51 pm
கானூர் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
<p><strong>கானூர் குளம் தூர்வாரும் பணி துவக்கம்</strong></p> <p>அவிநாசி, மார்ச் 10- அவிநாசி அருகே கானூர் குளம், தனியார் நிதி நிறுவன உத வியுடன் தூர்வாரும் பணி செவ்வாயன்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானூர் பகுதியில் &nbsp;160 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. அவிநாசியின் &nbsp;மையப்பகுதியில் அதிக பரப்பளவு கொண்ட இந்த குளம் முட் புதர்கள் மண்டி, செடிகள் முளைத்து கரைகள் பலமற்று உள் ளது. இதை தூய்மைப்படுத்த வேண்டும் என கானூர் ஏரி பாது காப்பு சங்கத்தினர் கோவை கௌசிகா நீர் கரங்கள் அமைப்பி னரை அணுகினர். இதன் மூலம் தனியார் வங்கி நிதி நிறுவனம் &nbsp;குளத்தை தூய்மை செய்ய உரிய நிதி உதவி அளித்துள்ளது. &nbsp;இதைத் தொடர்ந்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கம், கோவை &nbsp;கௌசிகா நீர் கரங்கள் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து &nbsp;கொண்டு கானூர் ஏரி புனரமைக்கும் பணியை துவக்கி னர். &nbsp;இந்த நிகழ்வை கோவை நீர்வள பாசன உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் தலைமையேற்று நடத் தினார். இதைத் தொடர்ந்து நீர் சிக்கனம் குறித்தும், நீரை பயன் படுத்துவது குறித்தும் வட்டாட்சியர் விஜய்ராஜ் உரையாற்றி னார். இதில் கௌசிகா நதி அறக்கட்டளை நிறுவனர் செல்வ ராஜ், வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர். &nbsp;இந்த ஏரி தூர்வாரும் பணி தொடங்கும்போது மும்மதத்தி னர் வேதம் முழங்க பணிகளைத் தொடக்கினர். மேலும் அவி நாசி அத்திக்கடவு திட்டத்தில் இருந்து வரும் நீர் இப்பகுதி &nbsp;குளத்திற்கு கூடுதலாக தேவைப்படும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram