தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கன்னிகைப்பேர் கேஸ் கசிவு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

22 Jun 2026, 1:30 am
கன்னிகைப்பேர் கேஸ் கசிவு  பலியானோர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>கன்னிகைப்பேர் கேஸ் கசிவு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 21- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள ‘புனித பீட்டர் பால் கடல்சார் உணவு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும்’ தனியார் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒடிசா, அசாம், மணிப்பூர், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கேஸ் கசிவால் இரவுப் பணி முடித்துத் தங்கியிருந்த 80-க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும் வாயிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயக்கமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், விபத்து நடந்த தொழிற்சாலையை உடனடியாக மூடி ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.