தேனியில் கண்ணதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம்
18 Jul 2026, 9:23 pm
<p><strong>தேனியில் கண்ணதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம்</strong></p><p>தேனி, ஜூலை 18- தேனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலை வர் கே.எஸ்.கே.நடேசன் தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் அல்லி உதயன் வரவேற்று பேசினார். அமை ப்பு தினம் குறித்து எழுத்தா ளர் தேனி சீருடையான் எடுத் துரைக்க, கலாவதி பாடல் கள் இசைத்தார். சேது, பா. இராமமூர்த்தி, கவிஞர் இதய நிலவன், மா.ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். நாட்டுப்புறக் கலை ஞர் எஸ்.கே.பாலு நன்றி தெரி வித்தார். மாவட்டச் செயலா ளர் ம.காமுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் உரை யாற்றிய எஸ்.வி.வேணு கோபாலன், “பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த கவிஞர் கண்ணதாசன், தான் கம்ப ராமாயணச் செய்யு ளின் சந்தங்களில் உள்ளத் தைப் பறிகொடுத்த இன் பத்தை தனது மேடை பேச்சு களில் குறிப்பிட்டவர். வெவ் வேறு காலகட்டங்களில் சிந் தனை மாற்றங்களுக்கு உட் பட்டவர், கறுப்புப் பணம் திரைப்படத்தில், ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், வல்லான் பொருள் குவிக்கும் தனி யுடைமை நீங்கி வர வேண் டும் திருநாட்டில் பொதுவு டைமை’ என்று எழுதியவர்” என்றார்.</p>
