தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கணியாகுளம் ஊராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை தனிநபர் மின்வேலியால் ஆக்கிரமித்து அச்சுறுத்தல் உடனே அகற்ற விவசாயத்தொழிலாளர் சங்கம் கோரிக்கை

30 Sept 2026, 9:48 pm
கணியாகுளம் ஊராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை தனிநபர் மின்வேலியால் ஆக்கிரமித்து அச்சுறுத்தல் உடனே அகற்ற விவசாயத்தொழிலாளர் சங்கம் கோரிக்கை

கணியாகுளம் ஊராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை தனிநபர் மின்வேலியால் ஆக்கிரமித்து அச்சுறுத்தல்

உடனே அகற்ற விவசாயத்தொழிலாளர் சங்கம் கோரிக்கை

நாகர்கோவில், செப்.30-கன்னியாகுமரி மாவட்டம் கணியாகுளம் ஊராட்சியில் அரசால் கட்டித்தரப்பட்ட குடியிருப்பு பகுதியில் தெருவை ஆக்கிரமிக்கும் வகையில் மின்சார வேலி அமைத்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியை ஒட்டி உள்ளது கணியாகுளம் ஊராட்சி. இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் இறச்சகுளம் – கள்ளியங்காடு சாலை அருகில் அனந்தன்கால்வாயை ஒட்டியுள்ளது ஜேஜே நகர். இங்கு 24 குடும்பங்கள் அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகளில்வசிக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றையும் போராடிப்பெறும் நிலையில் உள்ளனர். நாகர்கோவில் மாநகரை ஒட்டியிருப்பதால் இந்த பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.திட்டமிடப்படாத வளர்ச்சி காரணமாக குப்பைக் கழிவுகள் குவியும் பகுதியாகவும் உள்ளது. அவற்றை அகற்றும்தூய்மைப்பணியாளர்களாக இங்குள்ள பலரும் வேலை செய்கிறார்கள்.இங்கு குடியிருக்கும் ஐயப்பன் கூறுகையில், பார்வதிபுரம் முதல் அனந்தன்பாலம் வரை உள்ள கால்வாய் கரையில்வசித்த 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் வெளியேற்றப்பட்டன. அதில்நிலமற்ற, வீடற்ற 24 குடும்பங்களுக்கு அரசே நிலம் ஒதுக்கிபட்டாவுடன் வீடுகளும் கட்டித்தந்துள்ளது. ஜேஜே நகர் என்கிற எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வர கால்வாயின் குறுக்கே பாலமும் கட்டித்தந்தார்கள்.இந்த பாலம் முற்றிலும் சேதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தரக் கேட்டால், நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்ற கூறுகிறார்கள்.

தனிநபர் ஆக்கிரமித்து அராஜகம்

ஊர் மத்தியில் உள்ள தெருவின் முடிவில் உள்ள நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதற்கான சுற்றுச்சுவரில் எங்கள் தெருவையும் பயன்படுத்தும் வகையில், பெரிய இரும்பு கேட்அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் எங்கள் குழந்தைகள் விளையாட முடியும். இப்போது எங்கள் பிள்ளைகள் நெருங்க முடி

யாத அளவுக்கு கேட்டுக்கு மேல் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, ஷாக் அடிக்கும்; உயிருக்கு ஒன்றும் ஆபத்து இருக்காது என்று ஏளனமாக பேசுகிறார்கள் என்றார்.

குழந்தைகளுக்கு விளையாட வசதி செய்திடுக

ஜேஜே நகரில் உள்ள வீடுகளுக்கான கழிப்பறை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிக்கிடந்தது. மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக குழாய்களை மாற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதுபோல் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்கிறார் அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி. மேலும் அவர் கூறுகையில், அச்சுறுத்தலாக தெருவின் முடிவில் உள்ள மின்சார வேலி உடனடியாக அகற்றப்பட வேண்டும். சுமார் 50 குழந்தைகள் உள்ள இடத்தில் அவர்கள் விளையாடுவதற்கான வசதி செய்யப்பட வேண்டும். மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பாக கருதப்படும் நிலம் குறித்து வருவாய்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.