தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி: கனிமொழி எச்சரிக்கை

9 Apr 2026, 5:30 am
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி: கனிமொழி எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி: கனிமொழி எச்சரிக்கை

சென்னை, ஏப். 8 - அதிமுக- பாஜக கூட்டணி திமுக வுக்கு எதிரான கூட்டணி இல்லை, தமிழ்நாட்டிற்கே எதிரான கூட்டணி என்று திமுக துணைப் பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி. தெரிவித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து திங்களன்று வாக்கு சேகரித்து பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு கலைஞர் ஒரு தேர்தலில் இலவச தொலைக்காட்சி பெட்டி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றிக் காட்டினார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குகிறார். அதை நிறைவேற்றிக் காட்டியது திமுக அரசு.

பாஜகவோடு கூட்டணி சேர்ந்தவர்கள் நிலைமை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதிமுக பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைத் தடுத்து நிறுத்தியது ஒன்றிய அரசு. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வரவில்லை.

எல்.சுந்தரராஜை தேர்ந்தெடுப்பீர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் பகுதி மக்களோடு பழகி இருக்கக்கூடிய வேட்பாளர். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.