தீக்கதிர் முக்கிய செய்திகள்
21 May 2026, 9:15 pm

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி

கரப்பான் பூச்சி கட்சியில் வெறும் 4 நாள்களில் பதினைந்து மில்லியன் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இது ஒரு பிரச்சனை அல்ல. இந்த நாடு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிக்கிறது. நாம் அதனைக் கேட்க வேண்டும்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி

கரப்பான் பூச்சி கட்சி போன்ற சமூக ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை ஜென் ஜி தலைமுறையினரின் கற்பனையைக் கவர்ந்திருக்கிறது. ஆனால் இளம் வாக்காளர்கள் நிறுவப்பட்ட எதிர்க்கட்சிகளை விட ஒரு கற்பனையான அரசியல் யோசனையின் மீது தங்கள் நம்பிக்கையை வைக்க விரும்புகிறார்கள் என்றால், இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு புறக்கணிக்க முடியாத ஒரு எச்சரிக்கையாகும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவுக்கு 97% வாக்குகள் விழுந்துள்ளன என்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது அல்லது இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரி, இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கு முற்றிலும் மாறான ஒரு முடிவை அறிவித்துள்ளார் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் அடுத்த கணமே, நான் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படலாம். ஆனால் எதற்கும் அஞ்சமாட்டேன்.