மக்களின் தீர்ப்பே மகத்தானது: கனிமொழி எம்.பி.
8 May 2026, 9:58 pm

மக்களின் தீர்ப்பே மகத்தானது: கனிமொழி எம்.பி.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள நிலையில், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தவெக ஆட்சியமைப்பது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்திருக்கும் அவர், “ துரதிருஷ்டவசமாக யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்பது உண்மைதான். தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். மக்களின் தீர்ப்பே மகத்தானது; அதை மதிக்க வேண்டியது அனை வரின் கடமை” என்று தெரிவித்துள்ளார். அதிமுக - திமுக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.