தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமரின் பேச்சுக்கள் மக்களைப் பதற்றமடையச் செய்கிறது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

17 May 2026, 8:42 pm
பிரதமரின் பேச்சுக்கள் மக்களைப் பதற்றமடையச் செய்கிறது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

பிரதமரின் பேச்சுக்கள் மக்களைப் பதற்றமடையச் செய்கிறது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

தூத்துக்குடி, மே 17- நாடு கடுமையான பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து வரும் வேளை யில், பொறுப்பான பதவியில் இருக்கும் பிரதமரே வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளச் சொல்வது மக்க ளிடையே எதிர்காலம் குறித்த அச்சத்தையும், பெரும் கேள்விக் குறியையும் உருவாக்கியுள்ளது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள் ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதே சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறி யாக மாறியுள் ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமை யாகப்பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை யும் கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. ஒட்டு மொத்தமாக நாம் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்க ளுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டுப்பாடு களையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.

மக்களை எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கக் கூடிய விஷயங்களைத்தான் அவர்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது, அனைத்துத் தரப்பு மக்களின் மன திலும் தங்களது எதிர்காலம் குறித்த அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.