திமுகவினருக்கு தனி இருக்கை கேட்டு கனிமொழி கடிதம்
8 May 2026, 9:56 pm
<p><strong>திமுகவினருக்கு தனி இருக்கை கேட்டு கனிமொழி கடிதம்</strong></p><p>வந்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கு தனியான இருக்கை ஒதுக்கீடு செய்யுமாறு, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற கட்சித் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். “தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை கருத்தில் கொண்டும், காங்கிரஸ் கட்சியுடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்து விட்ட தாலும், எங்களது உறுப்பினர்கள், அவையில் காங்கிரஸ் கட்சியினருடன் தற்போதைய இருக்கை ஏற்பாட்டைத் தொடர்வது பொருத்தமானதாக இருக்காது. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுக, இனி தனது கருத்துகளை சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் முன்வைக்க விரும்புகிறது. எனவே, திமுக உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றப் பொறுப்புகளை திறம்படவும் தங்குதடையின்றியும் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்” என்று கடிதத்தில் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
