தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில் பயணிகள் விஷயத்தில் அலட்சியம் தெற்கு ரயில்வேக்கு கனிமொழி எம்பி கண்டனம்

25 Feb 2026, 2:26 pm
ரயில் பயணிகள் விஷயத்தில் அலட்சியம் தெற்கு ரயில்வேக்கு கனிமொழி எம்பி கண்டனம்
<p><strong>ரயில் பயணிகள் விஷயத்தில் அலட்சியம் தெற்கு ரயில்வேக்கு கனிமொழி எம்பி கண்டனம்</strong></p> <p>சென்னை,பிப். 25- &ldquo;கடந்த சில நாட்களாக சென்னை &nbsp;புறநகர் பயணிகள் ரயில் சேவை ரத்து &nbsp;செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள் ளாவதும் வேதனையளிக்கிறது&rdquo; என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். சென்னை - தாம்பரம் ரயில் நிலை யத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில் இயக்கத்தில் சில மாற்றங்களை செய்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், &ldquo;நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன் படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல் பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அத னால் பொதுமக்கள் மிகுந்த &nbsp;அவதிக் குள்ளாவதும் வேதனையளிக்கிறது. ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப் பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி &nbsp;மாணவர்கள் வரை கடும் மனவுளைச் சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்&rdquo; என்று அவர் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.