தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

10 Oct 2026, 3:16 am
காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

திருப்பூர், அக்.9 -காங்கேயம் அரசு மாவட்ட மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காங்கேயம் அரசு மாவட்ட மருத்துவமனையில் தினசரி புறநோயாளிகளாக 400 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 30 முதல் 50 பேர்தங்கி சிகிச்சை பெறுகின்றனர். எனினும், 27 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 5 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 40 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில் நிரந்தர செவிலியர்கள் ஏழு பேர், ஒப்பந்த அடிப்படையில் ஏழு பேர் என மொத்தம் 14 பேர் மட்டுமே உள்ளனர். ரத்தப் பரிசோதனை ஆய்வுக்கூடம் எக்ஸ்ரே தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. சிடி ஸ்கேன் இயக்குவதற்கு பணியாளர் இல்லை. அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் அனுப்பும் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லாமல் உள்ளது.

போக்குவரத்து நெருக்கடி மிக்கநகரின் மையப் பகுதியில் இருப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட அரசுதலைமை மருத்துவமனை ஆரம்பத்தில் திருப்பூர் பெரியபளையத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அப்போதைய அதிமுக அரசு, உடுமலைப்பேட்டைக்கு மாற்றியது. அதன்பிறகு தாராபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்று அறிவிக்கப்பட்டு பின்னர் காங்கேயத்திற்கு மாற்றப்பட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பதவியில் இருக்கும் போதுதங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இவ்வாறுமாற்றம் செய்கின்றனர். எனினும் உடுமலை, தாராபுரம், காங்கேயம் ஆகிய மூன்று ஊர்களிலும் மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

குறிப்பாக, கோவை - திருச்சிநெடுஞ்சாலையில் அமைந்த காஙகேயத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் சூழலில், இங்கு தலைக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிஇல்லாததால் நோயாளிகள் கோவைக்கோ, திருப்பூருக்கோ கொண்டு செல்லப்படுகின்றனர். இதனால் வழியிலேயேஉயிரிழப்புகள் நேரிடுகின்றன.

எனவே, காங்கேயம் அரசு தலைமைமருத்துவமனையை பெயரளவில் வைத்திருக்காமல், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்நவீன வசதிகளுடன் முழுமையாகசெயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.