தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டா கேட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

1 hour before
பட்டா கேட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

பட்டா கேட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

திருப்பூர், ஆக.14-காங்கேயம் வட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா கோரி பலகட்ட கோரிக்கை மனு கொடுத்து போராட்டம் நடத்தியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இனியும் பட்டா வழங்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா செயலாளர் எம்.கணேசன் தலைமையில், வியாழனன்று வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்கள் நகரங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை நிலம், இலவச பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். குறிப்பாக, கடந்த 2024 ஆகஸ்ட் 14 இல் நத்தக்காடையூர் பகுதி மக்கள் இலவச பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் 152 மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதேபோல், 2024 டிச.31 இல் இலவச வீட்டுமனை பட்டா நிலம் கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் 972 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

பட்டா கேட்டு 2025 மே 4 அன்று வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட தெருமுனை கூட்டமும், 2025 மே 13 அன்று வெள்ளகோவில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம், 2025 ஜூன் 3 அன்று நத்தக்காடையூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்புப்போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜன.20 ஆம் தேதியன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டும், இன்னும் பட்டா, வீட்டுமனை நிலம்கேட்டு மனு கொடுத்த மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படவில்லை.ஆகவே கிராமப்புறத்தில் உள்ள புறம்போக்கு, நத்தம் நிலுவையில் உள்ள நிலங்கள் கண்டறிந்து வகை மாற்றம்செய்து, மனு கொடுத்த மக்களுக்கு இலவச பட்டா வழங்க

வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்மும் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில், கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர்கள் இரா.செல்வராஜ், ப.கருப்புசாமி, ஜெ.ராமநாதன், கிளைச் செயலாளர் வி.லோகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.