சிவன்மலை கிராம சாலைகளை செப்பனிட்டுத்தர காங்கயம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உறுதியளிப்பு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>சிவன்மலை கிராம சாலைகளை செப்பனிட்டுத்தர காங்கயம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உறுதியளிப்பு</strong></p>
<p> திருப்பூர், மார்ச் 13- காங்கேயம் ஒன்றியம் சிவன்மலை பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, ஒன்றியத்திலுள்ள கல் குவாரிகளிலிருந்து அதிக எடை யுள்ள பாரங்களை கொண்டு செல்லக் கூடாது என்று காங்கேயம் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மா னிக்கப்பட்டது. காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை சாலையில் செயல்படும் கல்குவாரிகள் அதிக பாரம் கொண்ட லாரிகளை இயக்குவதால் கிராம சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்துள்ளது. அவற்றை சீரமைத்து தர வேண்டும், கல்குவாரிகள் விதிமு றைக்கு புறம்பாக கூடுதல் பாரம் ஏற்றிய லாரிகளை இந்த சாலைகளில் இயக்கக் கூடாது என்று வலியுறுத்தி சாலையில் மரம் நடும் போராட்டம் வெள்ளியன்று நடத்துவதாக செல்லப்பம்பாளையம், ரெட்டி வலசு கிராம மக்கள் அறி வித்திருந்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச் சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற் காக காங்கேயம் வட்டாட்சியர் அலுவல கத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கேயம் வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற இப்பேச்சுவார்த்தையில் கிராம மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் கல்குவாரி உரிமையாளர் தரப்பி னர் பங்கேற்றனர். காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவ லர், காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அரசு தரப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், செல் லப்பம்பாளையம், ரெட்டி வலசு, சிவன் மலை கிராம சாலைகள் பழுதடைந்து இருப்பதை கள ஆய்வு செய்து சீர மைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பது என்று ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரி தரப்பினர் சாலைகளை சொந்த செலவில் சீரமைத்து தருவ தாக தெரிவித்தனர். காங்கேயம் வட்டாரத்தில் தேசிய, மாநில, மாவட்ட, கிராம சாலைகளில் உள்ள கல் குவாரிகள் பட்டியலெடுத்து அங்கு கண்காணிப்பு கேமரா பொருத் தவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் கிராமசாலைகளில் 10 டன் எடைக்கு மேல் உள்ள வாகனங்களை சட்டப்படி இயக்கக் கூடாது என்பதால் இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகள் முன்பும் தக வல் பலகை வைப்பது, கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவ டிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை அடிப்படை யில் வெள்ளியன்று நடத்துவதாக அறி விக்கப்பட்டிருந்த மரம் நடும் போராட் டம் கைவிடப்பட்டது.</p>
