‘போலி தயாரிப்பின் மலிவான நகல்’நடிகை டாப்சியை இழுவுப்படுத்திய பாஜக எம்.பி.கங்கனா
yesterday

‘போலி தயாரிப்பின் மலிவான நகல்’நடிகை டாப்சியை இழுவுப்படுத்திய பாஜக எம்.பி.கங்கனா

இந்தி திரையுலகில் நடிகைகள் கங்கனா ரனாவத் மற்றும் டாப்சிபானு இடையே கடந்த 2019ஆம்ஆண்டு முதல் மோதல் போக்கு நீடித்துவருகிறது. திரைப்பட முன்னோட்டத்தைபாராட்டியபோது தொடங்கிய இந்தபிரச்சனை, 2020ஆம் ஆண்டில் வாரிசு சர்ச்சையாகவும் வெடித்தது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த நடிகை டாப்சி,”நான் கங்கனாவை இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது. பிரச்சனைகள் உருவாவதற்கமுன்பும் சந்திக்கவில்லை. என் வளர்ப்பு, பேச்சு மற்றும் அணுகுமுறைக்கு ஏற்பவே எனது கருத்துகள் இருக்கும். யார்எந்த பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குஅரசியலில் சேரும் எண்ணமும் இல்லை” என சாதாரணமாக கருத்து தெரிவித்தார்.

உடனே பாஜக எம்.பி.யான நடிகை கங்கனா,“தனது பி-கிரேடு படத்தை (ஆபாச படம் வகை) விளம்பரப்படுத்தபோலி தயாரிப்பின் மலிவான நகல்ஒருவர் கிளம்பியுள்ளார். அவர் எனது பெற்றோரையும் வளர்ப்பையும் இழிவுபடுத்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார். போலி தயாரிப்பின் மலிவான நகலாக இல்லாமல் ஒரு அசல் குழந்தையை அவரது பெற்றோரால் ஏன் உருவாக்க முடியவில்லை?” என இழிவானகருத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, அந்த பதிவை மீண்டும் நீக்கினார்.

நடிகை டாப்சியின் பிறப்பையும், அவரதுபெற்றோரையும் இழிவுபடுத்திய பாஜகஎம்.பி. கங்கனாவிற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.