கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சாதனை மலர் வெளியீடு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சாதனை மலர் வெளியீடு</strong></p>
<p>புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் 5 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. சாதனை மலரை கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் பெற்றுக்கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சங்கர்(புதுக்கோட்டை), சின்னை பாண்டியன் (தஞ்சாவூர்), புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயண், எஸ்.ஜனார்த்தன், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
