கண்டாச்சிபுரம் வட்டத்தை முதலமைச்சர் கண்டுகொள்வாரா? 10 ஆண்டுகளாக நீடிக்கும் அவதி!
24 Jun 2026, 11:52 pm

கண்டாச்சிபுரம் வட்டத்தை முதலமைச்சர் கண்டுகொள்வாரா? 10 ஆண்டுகளாக நீடிக்கும் அவதி!

விழுப்புரம், ஜூன் 24- விழுப்புரம் மாவட்டம் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தபோது, திருக்கோவிலூர் தாலுகாவிலிருந்து 61 வருவாய் கிராமங்களைப் பிரித்து, புதியதாகக் கண்டாச்சிபுரம் வட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று உருவாக்கப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட இந்த புதிய வட்டம், தற்போது தோற்றுவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

ஆனால், இதுவரையில் இங்கு வட்டாட்சியர் அலுவலகம் (தாலுகா அலுவலகம்) மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு வட்டத் தலைநகரத்தில் இடம்பெற வேண்டிய கோட்டாட்சியர் அலுவலகம் (உட்கோட்டம்), நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை, மகளிர் காவல் நிலையம், தாலுகா அரசு தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட எந்தவொரு முக்கிய அரசு அலுவலகமும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட அரசுச் சார்ந்த தேவைகளுக்காகப் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

ருத்தில் கொண்டு புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் (கமிட்டி) அமைத்துத் தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்யத் திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான கட்டட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது தவிர, கண்டாச்சிபுரத்தில் தற்போது ஒரே ஒரு அரசு வங்கி மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் தினமும் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, கூடுதலாக மற்றொரு அரசு வங்கிக் கிளையை உருவாக்க வேண்டும்.

மாணவர் மற்றும் போக்குவரத்து வசதி

இப்பகுதி மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக ஒரு புதிய அரசுப் பொதுக் கல்லூரியைத் தொடங்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை உருவாக்கி, அதன் மூலம் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று வர ஏதுவாகப் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு அலுவலகங்களை உடனே அமைக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கண்டாச்சிபுரம் வளர்ச்சிக் குழு சார்பில் ஏராளமான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது இத்தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளோ இதற்காக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடவசதிப் பற்றாக்குறை காரணமா?

கண்டாச்சிபுரம் பகுதியில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்குப் போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தை அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். ஒரு வட்டத் தலைநகரம் உருவாகும்போது அங்கே அரசு அலுவலகங்கள் அமைவதற்குத் தேவையான இடவசதி உள்ளதா, அப்படி இல்லை என்றால் அதற்கு மாற்று வழி என்ன என்பதையெல்லாம் அரசு முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் புதிய வட்டத்தையே உருவாக்க வேண்டும். ஆனால், வட்டம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பிறகு, இடவசதி இல்லை என்று அதிகாரிகள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, புதிய அரசு அலுவலகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை, வாடகை இடங்களிலோ அல்லது தனியார் நிலங்களைக் கிரயம் பெற்றாவது அனைத்து அரசு அலுவலகங்களையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தற்போதைய அரசு முன்வர வேண்டும்.

டங்களையும் பிரிக்கும் அரசு, அதற்கான கட்டடங்களைக் கட்டி, அலுவலகங்களைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதுதான் முறையான நடைமுறை. ஆனால், ஒரு வட்டத் தலைநகரம் உருவாகி 10 ஆண்டுகளாகியும் முக்கிய அலுவலகங்கள் துவங்கப்படாமல் இருப்பதால், புதிய வட்டம் அமைக்கப்பட்டதன் பலனை இப்பகுதி மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, கண்டாச்சிபுரம் பகுதி பொதுமக்களின் நீண்ட காலச் சிரமங்களைத் தீர்க்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதிய அரசு அலுவலகங்களையும், கட்டடங்களையும் இங்கேயே அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி மற்றும் கண்டாச்சிபுரம் வளர்ச்சிக் குழுவினர் சார்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.