முந்தய பக்கம்

கண்டாச்சிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

9 Oct 2026, 1:41 am
கண்டாச்சிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா  வழங்க வட்டாட்சியர் உறுதி

கண்டாச்சிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

கண்டாச்சிபுரம், அக். 8 –விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரை தாழனூர் கிராமத்தில் வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ். கணபதி தலைமை

யில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் எம். பாபு, வட்ட துணைச் செயலாளர் என்.எஸ். ராஜா, வட்ட பொருளாளர் என். செங்கேணி, வட்டக்குழு உறுப்பினர்கள் கே. கலியன், பி. அருள்ஜோதி, ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி. முருகன், ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டத் தலைவர் ஜே.பாக்கியம் மற்றும் தவிச வட்டப் பொரு

ளாளர் ஏ. முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சி யர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram